வீண்போக்காது, யாவருக்கும் நன்மை பயக்கக்கூடிய
விஷயங்களையே செய்துவருவார்.

இவ்வாறு பல வருஷங்கள் கழிந்தன. வித்வானுக்கு
வயதும் அதிகமானது. பெலஹீனமும் அதிகப்பட்டது.
குடும்பத்திலும் பல கஷ்டங்களும் வியாதிகளும் நேர்ந்தன.
அவரது சேஷ்ட புத்திரி காந்திமதியம் மாளவர்களும் மூன்றாம்
புத்திரன் தெய்வநாயகம் பிள்ளையும் ஒருங்கே வியாதிப்பட்டனர்.
இவ்வித நிகழ்ச்சிகளால் வித்வானுடைய பெலவீனம்
அதிகரிக்கவே, அவரும் வியாதியில் விழுந்தார். வியாதி
அதிகரித்தது. பல சமயங்களில் ஸ்மரணையற்றும் இருந்தார்.
தன் பற்களைக் கட்டியிருந்த பொன் கம்பியினால் நேரிட்ட
உபாதையும் நம் வித்வானை அதிகக் கஷ்டப்படுத்தியது.
வைத்தியர்களுடைய உத்திரவை அனுசரித்து மூன்றுமாதம்
படுக்கையிலிருந்தார். இவருடைய மனமோ தாமரையிலைத்
தண்ணீர்போல பரமசிந்தையிலே நின்றது.

வித்வானுக்கு வியாதியும் பெலஹீனம் அதிகப்பட்டு
வருவதை அறிந்த யாவரும் கலக்கமுற்றனர். இச்செய்தியானது
திருநெல்வேலி நாடெங்கும் பரவவே, அவரை தரிசிக்கும்படி
வந்தவர்கள் அநேகர். கலாசாலை மாணவரும் அவரிடம்
கற்றுத்தேறிய உத்யோகஸ்தர்களும் அவரைக்கண்டு மனமுருகி
அழுதார். அவர் மக்கள் முதலிய இனத்தவர் ஒருபக்கம்
அழுதார். பாளையங்கோட்டைத் திருச்சபையின் அங்கத்தவர்
ஒருபக்கம் மனதுருகி நின்றார். வித்வானை மிகவும்
மதித்துவந்த மிஷனெரிகள் ஒருபக்கம் கண்கலங்கி நின்று
பார்த்துச்செல்லுவார். இவ்வாறு கண்கலங்கிநின்ற
மிஷனெரிமாருள் ஸ்ரீமதி கார்மைக்கல் மிசியம்மாள் ஒருவர்.
நமது வித்வானுடைய ஆத்மாவானது அவருடைய சரீரத்தை
விட்டு பிரியுந்தருணத்தில் அவர் பக்கத்தில் நின்று அவருக்கு
ஆறுதல் தரும் பெரும்பாக்கியத்தைப்பெற்ற உத்தமி இவர்.
பக்தசிரோமணியாகிய நம் வித்வானுடைய கடைசிநேரத்தை
இந்த உத்தமி விஸ்தரிக்கும் விதம் வருமாறு:-

'அவரை (வித்வானை) நான் மறுபடியுங் கண்டேன்.
அக்கால் அவர்

மரணமடையுந்தருவாயில் இருந்தார்.
பிரக்கினையற்றிருந்தவர் போல் காணப்பட்டார். 'இயேசு'
என்னும் பதத்தை தமிழ் பாஷையில் பெரிதாக ஒரு
கார்டில் எழுதிக்கொண்டு போயிருந்தேன்.
அருகிலிருந்தவர்கள் அவர் என்னை
அறியமாட்டாரென்றும், அவர் வாசிக்கக்கூடாத நிலைமை
யிலிருக்கின்றார் என்றும் துயரத்துடன் சொன்னார்கள்.
அவரோ கண்களைத்திறந்து அப்பதத்தை அன்புடன்
நோக்கினார். அவர் முகமோ ஒரு பெரிய ஒளி
வீசியதுபோல் பிரகாசித்தது. அம்முகத்தில் வீசிய
வெளிச்சத்தையும், அன்பு நிறைந்த கண்ணோடு
அப்பதத்தைப் பார்த்த அளவில் அவரில் வெளிப்பட்ட
புன்சிரிப்பையும் நான் ஒருக்காலும் மறவேன். பிறகு அவர்
தன் கையைத் தூக்க யத்தனித்ததை அறிந்தோம்.
அருகிலிருந்த ஒருவர் அக்கையைத் தூக்கிப்பிடித்துக்
கொண்டிருந்தார். அவருடைய விரல் அதை
எழுதுவதுபோல் அட்சரத்தின்பின் அட்சரமாக
அப்பதத்தின்பேரில் வரைந்துவந்தது. அவரால்
பேசமுடியவில்லை. ஆனால் நடுக்கங்கொண்ட விரலோ
திரும்பத்திரும்ப