பல சமயங்களில் இருந்தார்.
தாம் பாடிக்கொண்டுவருகிற இந்தக்
காவியம் அரைகுறையாக நின்றுவிடுமோ என்ற பயம்
வித்வானைப் பிடித்தது. குடும்பவிஷயமான வேறு பல
சங்கடங்களும் நேர்ந்தன. தனது உயிர்த்துணையான தன்னருமை
மனைவியும் ஜுரங்கண்டு 1891ஆம்
வருடம்
பரமபதம் அடைந்தார்.
இவ்வித துன்பங்களெல்லாம் நமது வித்வானுக்கு நேரிட்டாலும்
அவரது பக்தியும் விசுவாசமும் குறைவுபடவேயில்லை. பத்தரை
மாற்றுத் தங்கத்தைத் தேய்க்கத்தேய்க்க எவ்வாறு அது
அதிகமதிகமாய்ப் பிரகாசிக்குமோ அவ்வாறே வித்வானுடைய ஆத்மீக
ஜீவியமும் இருந்தது. சிறைச்சாலைத் துன்பத்தினிடையே பனியன்
மோட்சபிரயாணம் என்னும் நூலை எழுதியதுபோல நமது
வித்வானும் இவ்வித துன்பங்களினிடையே இரக்ஷணிய
யாத்திரிகம் என்னும் இந்த பக்தி நூலை எழுதிமுடித்தார்.
இக்காலங்களில் வித்வானது பிள்ளைகளும் நண்பர்களும்
மிஷனெரிமார்களும் இவரது பக்தியையும் கல்விச் சிறப்பையும்
அறிந்து இவரை ஆதரித்து, அன்பு பாராட்டி வந்தனர்.
இவ்வாறு இவருக்கு ஆறுதல் தந்தவர்களில் முதன்மையானவர்
திருநெல்வேலிச் சபைகளுக்கு பிரதானிகமுள்ள குருவும்
வித்வானுடைய மாணாக்கரில் ஒருவருமான கனம் டி. உவாக்கர்
ஐயரவர்கள்.
மஹா வித்வான்
ஹென்ரி அல்பிரட் கிருஷ்ணபிள்ளை
தாம் பாடி முடித்த பெருங்காப்பியமாகிய இரக்ஷணிய
யாத்திரிகத்தைத் தாமே பிரசுரம்பண்ணும்படி முயற்சித்து
வரும்பொழுது, அவருடைய நண்பரான உவாக்கர் ஐயர் இது
விஷயத்தை சென்னை கிறிஸ்தவ கல்வி அபிவிர்த்தி சங்க
காரியதரிசியான கனம் மார்டாக் துரையவர்களிடம் பேசி
அச்சங்கத்தாரே இந்நூலை அச்சிட்டுப் பிரசுரம்பண்ணும்படி
ஏற்பாடு பண்ணினார். அச்சுவாகனமேறியபோது வித்வான்
சென்னைக்குச் சென்றார். தேவானுக்கிரகத்தால்
இக்காவியமானது
1894 ஆம்
வருடம்
மே மத்தியில் வெளிவந்தது.
தமிழபிமானிகள் யாவரும் இதைக் கண்ணாரக் கண்டு
களித்தனர். வித்வானோ எம்பெருமானது கருணைப்பெருக்கை
நினைந்து மனமுருகித் துதித்தார்.
அச்சுவாகனத்தினின்றிறங்கிய
இரக்ஷணிய
யாத்திரிகமென்னும் இப்பெருங்காப்பியமானது தமிழ் உலகத்தில்
உலவுவதைக் கண்ணுற்ற வித்வான் இந்த அரிய கைங்கரியத்தில்
தன்னையும் உபயோகித்தருளிய கருணாகர மூர்த்தியின்
கிருபைப்பெருக்கை நினைந்து நினைந்து, புதிய ஊக்கமும்
உற்சாகமும் உடையவராய்த் தம் வாணாளைச்
செலவிட்டுவந்தனர். பாளையங்கோட்டைக் கலாசாலையில்
பிரதம தமிழாசனம் வகித்திருந்த நமது வித்வான்
எவ்வெவ்வகைப்பட்டோராலும் சிறப்புச்செய்யப்பட்டவராய்,
யாவருக்கும் தம்மாலியன்ற உதவிபுரிகின்றவராயிருந்தனர்.
தமது உத்தியோக நேரமொழிந்த மற்ற நேரங்களில் கலாசாலை
மாணவருக்கும் தம் வீட்டில் இலக்கணம் இலக்கியம் முதலிய
கற்றுக்கொடுப்பார். தம் வீட்டுக்கு வரும் யாவரோடும்
மதசம்பந்தமான சம்பாஷணைசெய்வார். துன்ப துக்கங்களில்
அகப்பட்டவர்களை ஆறுதல்படுத்திவருவார். தனியாகவேனும்
பிறரோடு கூடியேனும் சுவிசேஷப்பிரசங்கங்கள் நடத்தி
வருவார். இடைப்பட்ட நேரங்களில் பக்திக்குரிய பாடல்களை
எழுதுவார். எவ்விதத்திலும் பொழுதை
|