வைதீக யத்தனங்கள்
கிருஷ்ணபிள்ளைக்கும் அவருக்கு முன்னும்
பின்னுங் ஞானஸ்நானம்பெற்ற மற்றோருக்கும் பரம நன்மைகளை
அடைவிக்கத்தக்க பரமோசித சாதனங்களாயிருந்தன.
'தவிரவும்
அக்காலத்து முருகங்குரிச்சிக் கிறிஸ்தவர்களும்
மற்ற கிராமாந்தரங்களிலிருந்து வரத்துப்போக்காக இருந்த
கிறிஸ்தவர்களும் புதிதாகக் கிறிஸ்தவர்களான நாங்களும்
ஒருவருக்கொருவர் பாராட்டின அன்பும், பட்ச ஐக்யமும்,
விகற்பமின்மையும், மதிப்பும் கொஞ்சமல்ல. வாரத்திலொருமுறை
கிரமமாக வீடுகளில் ஜெபக்கூட்டம் இருக்கும். நாங்கள்
பணஞ்சேர்த்து சுவிசேஷப் பிரசாரண மண்டபமொன்று
கட்டுவித்து புதிய கிறிஸ்தவர்கள் பிரதி தினமும் முறைப்படி
அவரவர் வேலை நேரம்போக மீதியான நேரத்தில் பாட்டையில்
போக்குவரத்தாயிருக்கும் ஜனங்கட்கு சுவிசேஷத்தைச்
சொல்லிவந்தோம். நல்லொழுக்கம், சன் மார்க்க சம்பாஷணை,
பரோபகாரம் முதலிய சத் கருமங்கள் நாளுக்கு நாள்
விருத்தியாகி முருகங்குரிச்சிக் கிறிஸ்தவ சபை செழிப்புள்ள
சிங்காரமான ஒரு நந்தவனம்போல் பரிமளம்
வீசிக்கொண்டிருந்தது. வருஷத்தில் ஒரு முறை சுதேச
கிறிஸ்தவர்களில் உத்தமோத்தமரான நாகர் கோயில் சபைக்குக்
குருவான கனம் தேவதாஸன் ஐயர் வந்து இந்த நந்தவனத்தில்
களைபற்ற விடாமல் பக்குவஞ்செய்து ஜீவதண்ணீரைப் பூரணமாக
நிரப்பிப்போவார். அந்நீதிமானால் முருகங்குரிச்சி
சபையாருக்குண்டான நன்மைகள் கொஞ்சமல்ல' என நமது
வித்வான் புகழ்ந்து கூறியிருக்கின்றார்.
நம்
வித்வான் திருநெல்வேலி ஸி. எம். எஸ். கல்லூரியின்
பிரதம தமிழாசனத்தில் வீற்றிருந்த காலத்தில் மாணவர்களுக்குக்
கல்வி கற்பிப்பதை, ஓய்ந்த நேரங்களில் இடைவிடாது ஆத்ம
தாகத்துடன் திருப்பணி புரிவதையுமே தம் தொழிலாகக்
கொண்டிருந்தார். கம்பரைப்போற் கவிபாடுந் திறமையுடைய
நமது வித்வான் இக்காலங்களில் தமது கிறிஸ்தவ
அனுபவங்களை கவிகளில் வார்த்துவைத்தார். அவர் இயற்றிய
நூல்களில் இவற்றைக் காணலாம். தாம் கிறிஸ்தவராகிறதற்கு
முன்னே மார்க்க ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த காலத்தில்
அவர் வாசித்த புஸ்தகங்களில் ஒன்று பரதேசியின்
மோட்சபிரயாணம் என்னும் நூல் பனியன் என்னும்
பக்தனியற்றிய பாவனாசரிதமாகிய இப்புஸ்தகம் நம்
வித்வானுடைய மனதில் மிகப்பெரிதும் கிரியைசெய்தது.
இந்நூல் தமது சொந்த அனுபவங்களையும் நிலைமையையும்
பிரதிபிம்பித்துக் காட்டுவது போல் வித்வானுக்குத் தோன்றியது.
ஆகையால் இந்நூலையே ஆதாரமாகக்கொண்டு
"இரக்ஷணிய யாத்திரிகம்" என்னும்
பெருங்காப்பியத்தைப்
பாடினார். இது பாளையங்கோட்டையில் வெளிவரும்
'நற் போதகம்'
என்னும் பத்திரிகையில் சிறிது சிறிதாக
வெளிவந்ததைக் கண்டு வாசித்துணர்ந்த பலர் இது தமிழ்
நாட்டுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய நூலென்று நமது
வித்வானை உற்சாகப்படுத்தினார். வித்வானுடைய மனமும் இந்த
வைதீக கைங்கரியத்தில் ஈடுபட்டது. ஆயினும் இல்லறத்துக்கு
இயல்பாயுள்ள பற்பல தடைகளும் இடையூறுகளும் இந்த உத்தம
ஊழியத்தை நமது வித்வான் தொடர்ந்து செய்யாதபடி தடுத்தன.
தனது பிள்ளைகள் வியாதியால் பீடிக்கப்பட்டனர். பலமான பல
வியாதிகள் தனக்கு வந்தன. உயிர்தப்பிப் பிழைப்போம் என்கிற
நம்பிக்கையில்லாமற் போகத்தக்கதாக அவ்வளவு மோசமான
நிலைமையிலும்
|