மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்பது. இதைக்குறித்து
வித்வான்தாமே தமது காவியத்தில் கூறியிருக்கின்றார்.

  1 கள்ளமில் நெஞ்சும் நெஞ்சில் கலந்தமெய்ச் சொல்லும்
சொல்லொத்
தெள்ளரும் ஒழுக்கும் தத்தம் உனக்கரிக் கிசைந்துள் ளாரே
வள்ளலெம் இளங்கோ மான்செம் மலரடிச் சுவடு தோய்ந்த
ஒள்ளிய நெறிசென் றந்தத் துயர்பர கதியில் சேர்வார்.

சத்ய வடிவாயிருக்கிற இயேசுபெருமானது உத்தம
அடியானாகிய நம்வித்வான் எப்பொழுதும் சத்யத்தையே
பேசுவார். இவரை நன்றாய் அறிந்த ஒரு ஹிந்து கனவான்
இவரைப்பற்றிப் பேசும்பொழுது, "சிருஷ்ணபிள்ளை
எப்பொழுதாவது பொய்பேச நான் கேட்டதே இல்லை.
சத்தியத்தினின்று அவர் தவறுதலை நான் எப்பொழுதாவது
கண்டதும் இல்லை. ஆகையால் அவர் வணங்கிவரும்
கடவுளிடத்தில் ஒரு விசேஷ வல்லமை இருக்கவேண்டும்"
என்று கூறியிருக்கிறார்.

  எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

என்று திருவள்ளுவ நாயனார் கூறியது நமது வித்வானுக்கே
பொருந்தும்.
 
7. பக்தி. பக்தி அன்பு என்பன ஒரு பொருட்பெயர்கள்.
ஆயினும் கிறிஸ்தவ சம்பிரதாயத்தில் அன்பு என்னும்
பதத்தைப் பொதுவாகவும் பக்தி என்னும் பதத்தைப்
பகவானிடத்தில் செய்யப்படும் அன்பைக் குறிக்கவும்
உபயோகித்து வருகிறோம். இம்மகானுபவரிடத்தில் விளங்கி
நின்ற பக்தியின் அளவை எடுத்துரைக்க எம்போன்றவரால்
முடியாது. இவரது பக்தியின் உயர்வுக்கு இவர் பாடிய ரக்ஷணிய
யாத்திரிகமே சாட்சியாகும். பக்தியே கசல நன்னடக்கைக்கும்
காரணம். திருவசனம் என்னும் விதையிலிருந்து முளைத்து,
விசுவாசமாகிய வேரை ஊன்றி, அன்பு என்னும் கிளைகளை
வீசி, ஒங்கி வளர்ந்து, சுத்த நினைவு என்னும்
வாசனையோடுகூடிய புஷ்பக்கொத்துகளை அதிகமாய்ப் பெற்று,
ஆகா சத்தை அளாவிச் செல்லுகின்ற பக்தியென்னும்
விருக்ஷத்துக்கு நன்னடக்கையே கனிகளாகும் என்று
இவர்தாமே கூறியிருக்கின்றார்.

  வித்தாகும் திருவசன முளைகிளம்பி விசவாச
உத்தமவேர் அகத்தூன்றி உள்ளன்பு கிளைத்தோங்கி
சுத்தநினை வெனும் நறும்பூந் துணர்மலிந்துன் னதந்தோயும்
பத்தியெனும் தருவினுக்கு நன்னடக்கை பலமாமால்.

இவ்வாறு கிருஷ்ணபிள்ளை ஒர் சிறந்த பக்தி
விருக்ஷமாயிருந்தார். அவரது விசுவாசம் மிகப் பெரிது.
துன்பகாலத்தும் இன்பகாலத்தும் என்றும் மாறுபடாத
விசுவாசம். அவருடைய அன்பு எத்திசையினும் சென்றது.
சிலர் செய்வதுபோல தமது பந்துக்களிடத்தில் மட்டும்
அன்புடையவராயிருந்தவரல்லர். களங்கமற்ற சுத்தமான
நினைவாகிய பரிமள


     1 பொழிப்புரை: - கள்ளமில்லாத மனமும், மனதோடு
பொருந்தியிருக்கின்ற மெய்யான சொல்லும், செசல்லோடு
பொருந்தியிருக்கின்ற இகழத்தகாத (நல்ல) ஒழுக்கமுமாகிய
இத்திரிகரண வேறுபாடின்மையை தங்கள் தங்கள்
மனச்சாட்சியுடனே இசையப்பெற்றவர்களே வள்ளலாகிய எமது
குமர ராஜனுடைய செந்தாமரைபோலும் சிவந்த திருவடிச்
சுவடுகளால் நடக்கப்பெற்ற பிரகாசமான பாதையில் சென்று
முடிவிலே மேலான பரகதியில் சேர்வார்.