வெகுகால ஆராய்ச்சியின்
பலனாகக் கிறிஸ்துமதத்தைத் தழுவி
இயேசு பெருமானே தங்களைப் பாவ பந்தத்தினின்று நீக்க
வல்லவர் என்பதை உணர்ந்தவர்களாய் அவரையே ரக்ஷா
பெருமானாக ஏற்றுக்கொண்டனர். இதே சமயத்தில்
கிருஷ்ணபிள்ளையின் சகோதரனாகிய முத்தையாபிள்ளையும்
கிறிஸ்துவைத் தன் ரக்ஷகராக ஏற்றுக்கொண்டு மற்றைய
இருவருடன் 1857ஆம் வருடம்
ஞானதீக்ஷையடைந்தார். தம்பி
கிறிஸ்தவனானதைக் கேள்விப்பட்ட கிருஷ்ணபிள்ளை அதிக
மனவியாகுலமடைந்தாராயினும் இவ்விஷயமானது அவருடைய
மனதை அசைத்தது. அவர் அதிக வியப்புற்று இதைப்பற்றி
ஆழ்ந்து நினைக்கலாயினார்.
(6)
இதன்பின் கிருஷ்ணபிள்ளையிடத்தில் பலர்
கிறிஸ்துவைப் பற்றிச் சம்பாஷிக்கவும் அவருக்குக் கிறிஸ்தவ
அறிவை ஊட்டவும் முயற்சித்தனர். இவர்களுள் விசேஷமானவர்
சமீபகாலத்தில்தான் கிறிஸ்தவரான ஸ்ரீமான் தனக்கோடி
ராஜு என்பார். இவர் முதிர்ந்த அறிவும் தீர்க்க புத்தியும்
உடையவர். நற்குண நல்லொழுக்கங்களில் சிறந்தவர். பெரிய
உத்தியோகஸ்தர், இவரது வார்த்தைகளும் அனுபவ சாட்சியும்
வித்வானுடைய மனதில் அதிகம் கிரியை செய்தது. இதே
காலத்தில் பாளையங்கோட்டையிலிருந்த மிஷனெரிகளில் சிலரும்
இவர் விஷயத்தில் அதிக முயற்சியெடுத்து வந்தனர். வித்வான்
இந்நாட்களில்
இருதலைக்
கொள்ளியுற்ற எறும்பென ஏகுமார்க்கம்
ஒருதலை யானுங்காணா துணங்கி,
கலங்கி யாது செய்வதெனத்
தெரியாது காற்றில் அடிபட்ட சருகு
போலச் சுழல்வாராயினார். இவ்வாறு வித்வானுடைய மனது
ஒருவழி நில்லாமல் உழன்றுகொண்டிருக்கையில் ஒருநாள்
ஸ்ரீமான் தனக்கோடி ராஜு வித்வானுடைய ஆத்மீக நிலைமையை
அவருக்கு எடுத்துக் காட்டி இளமை பக்தி, ஆத்தும விசாரம்
தீர்தல், இருதயக் காவல், மோட்ச பிரயாணம் என்னும் நாலு
புஸ்தகங்களை அவருக்குக் குறித்து, அவைகளைப் படித்துக்
கிரகிக்கும்படி அவருக்குப் புத்திகூறி யனுப்பினார். அவற்றை
வித்வான் படித்தபொழுது அவற்றின்கண் அடங்கிய ஆத்மீக
கருத்துக்கள் காந்தம் ஊசியைக் கவருவதுபோல அவருடைய
இருதயத்தைக் கவர்ந்தன. மோட்சபிரயாணம் என்ற அந்த நூல்
இவருடைய இருதயத்தைத் தொட்டு உணர்த்தியது. இதுமுதல்
தமது நண்பராகிய தனக்கோடி ராஜு அவர்களுடைய
ஆலோசனையின்படி வித்வான் நாலு சுவிசேஷங்களையும்
ஒழுங்காய் வாசிக்கவும் தன் இருதயக் கண்கள் திறக்கப்படும்படி
மன்றாடவும் தொடங்கினார். ஆயினும் இருதயத்தில் பல
சந்தேகங்கள் தோன்றின.
(7)
நிக்கோதேமு இயேசுநாதரிடத்தில் இரவில் தனித்துச்
சம்பாஷித்துக்கொண் டிருந்ததுபோல ஒருநாளிரவு
கிருஷ்ணபிள்ளையும் தனக்கோடி ராஜு அவர்களோடு நெடுநேரம்
சம்பாஷித்துக்கொண்டிருந்தார். வெகு நாளாகத் தனக்கு
விளங்காத விஷயங்களையெல்லாம் வித்வான் தன் நண்பருக்கு
எடுத்துரைத்தார். அவரும் இவையெல்லாவற்றையும் அவருக்கு
விளக்கிக் காட்டி தனது அனுபவங்களையும் அவருக்குக்
கூறினார். அந்த நாளிரவில் நடுநிசிமட்டும் நடந்த இந்த
சம்பாஷணைக்குப்பின் தம் சந்தேகங்கள் நீங்கின. அவரது
பயமும் அகன்றது. அந் நிமிஷமே
|