இயேசுகிறிஸ்துவை வித்வான் தமது ஹிருதயத்தில் ஏற்றுக்
கொண்டனர். இந்த நாளிரவைப்பற்றி வித்வான் தாமே கூறும்
விஷயம் கவனிக்கப்படத்தக்கது.

'அன்றே கிறிஸ்துநாதரை அறிந்தேன். அன்றே அவர்
திருநாமத்தை

  முன்னிட்டு ஜெபம் செய்யத்துணிந்தேன். அன்றே வெகு
நாட்களாக மதுரமாக இருந்த பாப தோஷங்கள் யாவும்
கசப்பாக மாறின. அன்றே ஸ்ரீ கிறிஸ்துவை வழிபடத்
தீர்மானித்தேன். அன்றைக்கே ஞாபகார்த்தமாக ஒரு
செய்யுள் எழுதிவைத்தேன். அன்றே தெய்வம் என்
இதயத்தையும் அவரைத் துதிக்க என் வாயையும் திறந்தார்'

என வித்வான் கூறியிருக்கின்றார். அந்த நாளிரவில் அவர் எழுதி
வைத்த செய்யுளாவது:-

  கருணையங் கடலே அந்த காரமாம் வினையைப் போக்கும்
அருணனே அடியேற்காக ஆருயிர் விடுத்த தேவே
பொருணயந் தெரியாத் தீய புல்லியனெனை யாட்கொள்ளத்
தருணமென் னிதய நிற்கே சமர்ப்பணந் தருமமூர்த்தி

அன்றிரவெல்லாம் நமது வித்வான் வைதீக சிந்தையுடையவராய்
பகவானுடைய திருவடிகளையே மனதில் தியானித்தவராய்
அவரது திவ்ய கிருபையை வியந்து துதிப்பாராயினார். மேற்கூறிய
இக்கவிதான் நம் பெருமானை வித்வான் துதித்துப்பாடிய
முதல் கவி.

கிருஷ்ணபிள்ளையின் ஹிருதயமானது நம்பெருமா.னுடைய
திருவடிகளுக்கு ஆட்பட்டுவிட்டது. ஆயினும் இவ்விஷயத்தை
உலகமறியுமாறு வெளியிடுவதற்கு அவருக்கு மனம் ஒவ்வவில்லை.

மன நிலையைத் தனக்குள்ளே அடக்கிச் சிலநாள்
செலவிட்டார். ஆயினும் நித்திய கர்மானுஷ்ட விரதாதிகளின்மேல்
ஊக்கம் குறைந்து வருவதை இவரது வீட்டார் கவனித்தனர்.
இதனால் இவர் இரவில் வெகு ரகசியமாகவே ஜெபித்து வந்தார்.
இதைக் கண்ட இவர் மனைவிக்கும் இவரைப்பற்றிய சந்தேகம்
அதிகரித்தது. ஒருநாள் இவர் தம் மனைவியை அழைத்துத்
தனித்துவைத்து கிறிஸ்துமதத்தைப்பற்றி அம்மாதிடம்
பேசத்தொடங்கினார். இதைக் கேட்டவுடன் அவர் மனைவி
கலங்கித் திகைத்து தேம்பி அழுது அந்நிமிஷமே உயிர்
துறப்பதாகக் கூறினார். அக்காலத்தில் வித்வானுக்கு ஐந்து
வயதுக்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர்.
இவரது தாயாரும் இவருடனே யிருந்தார். தான் மட்டும்
கிறிஸ்தவனானால் குடும்பத்தில் குழப்பமுண்டாகுமென்று இவர்
சஞ்சலப்பட்டார். கிறிஸ்தவனாகாமலிருக்கவும் இவருக்கு


               இதன் பொருள்

* கருணா சமுத்திரமே! பாபாந்தகாரமாகிய இருளை
நீக்கும் ஞான சூரியனே! அடியேனுக்காக அருமையான
ஜீவனையும் விட்ட தெய்வமே! உண்மைப்பொருளையும் அதன்
நலத்தையும் அறியாத தீமை நிறைந்த ஈனனாகிய என்னை ஆள்
கொண்டருளுவதற்கு இதுவே ஏற்ற தருணம். தரும மூர்த்தியே!
என் இருதயத்தை உமக்கே தேவார்ப்பணமாகக் கொடுக்கிறேன்.
சமர்ப்பணம் = பெரியோருக்குக் கொடுக்கும் கொடை.