பெருமானார் நடை, கவிஞர்க்குத் தமிழ் மன்னரின் நடையை
நினைவூட்டுகிறது.
தெருவெல்லாம் சமய
நட்பே. செழித்தோங்கும் புதுவை நல்லூர்த்
துரை மாலிறையன் அன்பு தோன்றவே துணிந்து செய்தேன்
எனப் பெருமை கொள்கிறார்.
குர்ஆன் வழி நிற்க :
நபிகள்
நாயகம் தோன்றிய காலத்திலிருந்த அரபு நாட்டு
நிலையை
அருமையாகக் கவிதையில் படம்பிடித்துக் காட்டுகிறார்.
“கண்ட கண்ட உருவங்களைக் கடவுளாகத்
தொழுதார்கள்
பெண்டிர் பிள்ளை எல்லாரும் பெருமை இல்லார்
என்றார்கள்
சண்டை ஒன்றே அவர்செய்யும் சாதனையாய் வாழ்ந்தார்கள்
மண்டும் இவர்கள் நடுவில்தான் மக்கா நகரம்
செழித்ததுவே.”
இப்படிப்பட்ட
மக்களைத் திருத்தி, அவர்கள் மேற்கொள்ள வேண்டிய
நெறியை நிலைநாட்டி, அவர்கட்கு வழிகாட்டுதலாகத்
திருமறையைத் தந்து
செல்வதாகவும் கூறி, அம் மறைவழி மாறாமல் நடக்க வேண்டும்
என்னும்
அறிவுரையும் கூறிய நிலையிலேதான் பெருமானார் இறைவனை
அடைகிறார்
என்பதைச் சொல் மணந்து நெஞ்சில் தேன்சொரியப் பாடுகிறார்
திரு. மாலிறையன்.
“உங்களுக் குரியதாக ஒன்றினை விட்டுச் செல்வேன்
செங்கனி வாயால் ஓதிச் சிறப்பினை அடைவ தற்கே
நங்களின் இறைவன் தந்த நயவுரை திருக்குர்ஆனை
எங்கணும் எவரும் போற்றி எந்நாளும் தொடரவேண்டும்.!”
என மக்களிடம் கடைசியாகப் பேசும் போது பெருமானார் கூறுகிறார்.
நெறியை நெறிபிறழாது கூறுதல் :
இசுலாத்தின் கருத்துகளை எளிய தமிழில் எவரும் புரிந்து கொள்ளும்
வண்ணம் கவிஞர் அருமையாகப் பாடிச் செல்கிறார். இசுலாமியர்களின்
ஐம்பெருங் கடமைகளை ஒரே பாடலில் இணைத்து மாலையாக்கியுள்ள தன்மை
மிகவும் சிறப்பாக அமைந்து உள்ளது.
ஐம்பெருங் கடமைகள் யாவை?
|