தூயநற் கலிமா ஓதல்; தொழுகையோ ஐந்து வேளை
ஆயநன் னோன்பு இயற்றல்; அரியதாம் கொடை சக் காத்து;
போயமர் புனித மான புறப்பாடும்; ஆன ஐந்தும்
நேயமாய் முசுலீம் மாந்தர் நிலைத்த சீர் கடமை என்றார்.

ஹஜ் என்பதனைப் புனிதப் புறப்பாடு என்கிறார்.

இசுலாத்தின் ஐம்பெருங் கடமைகளுள் ஸக்காத்தும் ஒன்று. அதாவது
செல்வந்தர் தங்களின் பொருளின் ஒரு பகுதியை ஏழைகட்கு அளிப்பதாகும்.
ஸக்காத்து கொடுக்க வேண்டிய அளவும் முறையும், அதைப் பெறுவதற்குத்
தகுதியுடையவர் யாவர் எனவும் கூறப்பட்டுள்ளன. பக்கீர் - அதாவது சிறிய
அளவு வருவாயுடன் வறுமையில் வாழ்பவர்; மிஸ்கீன் - அதாவது
பொருளாதாரத்தில் மிகவும் ஏழ்மை நிலையிலிருப்பவர்கள், இசுலாத்தின்பால்
மனந் திரும்பி அதனை ஏற்ற புதியவர்கள்; அடிமைகளை விடுதலை செய்யத்
தேவைப்படும் பொருள்; வழிப்போக்கர் எனச் சக்காத்து யார்யாருக்குக் கொடுக்க
வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. இவற்றைக் குறிப்பிட்டுச்
சொல்லியுள்ளதால் இவற்றிற்கு மட்டுந்தான் அளிக்கப்பட வேண்டும்.
மற்றவர்கட்குக் கூடாது என்பதன்று. பொதுவாக ஏழைகட்கும், நற்செயல்களுக்கும்,
நெறி வளர்ச்சிக்கும் இது பயன்படுத்தப் பெறும். இதனை.

“காணார் கேளார் வாயில்லார் கால்கை இல்லார் நோயுள்ளார்
பேணா மக்கள் வறியோர்கள், பிழையா இசுலாம் நெறி கொண்டோர்
மாணா அடிமைப் பட்டார்கள்; வாழத் தொழில்மேற் கொள்வோர்கள்
வானோர் வாழ்த்தும் சக்காத்து வழங்கத் தக்கார் என்பார்கள்”

எனக் குறிப்பிடுகின்றார்.

இறப்பெய்தியவர்களை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும் முறையைத்
தெளிவுபட ஒரு பாடலாக்கித் தந்துள்ளார்.

நீரால் கழுவிக் குளிப்பாட்டி நெடிய வெள்ளைத் துணிசுற்றிச்
சீராய் மிகுந்த மணநீரைச் சிறக்கத் தெளித்து மணமூட்டிக்
கார்மைச் சுறுமா கண்தீட்டி, கவின்சந் தூக்குப் பேழைக்குள்
சேர்த்து வைத்துத் தோள்மீதில் தெருவில் சுமந்து நடந்தார்கள்.

வரலாற்றுச் செய்திப் பின்னல் :

பெருமானார் எழுதப் படிக்கத் தெரியாதவர். ஆனால் கல்வியின் சிறப்பை
அவர் வெகுவாக எடுத்துரைத்துள்ளார். சீனா சென்றேனும் கல்வியைக் கற்றுக்
கொள்ள வேண்டும் என்பது அவர் திருவாக்கு. கல்வியை நாடிச்