இலக்கியச் சுடர்
எழுத்து வேந்தர்
பல்கலைச் செல்வர்
தர்காப் புலவர்
இறையருள் உரைமணி |
பேராசிரியர்
மு.சாயபுமரைக்காயர்
பொதுச்செயலாளர், இஸ்லாமியத் தமிழ்
இலக்கியக்கழகம் |
தாஜுல்
கலாம்
தமிழ் மாமணி
கலை இலக்கிய வித்தகர்
சான்றோர் மாமணி
சேவா ரத்னா |
மதிப்புரை
அகிலத்திற்கோர்
அருட்கொடையாக, அழகிய முன்மாதிரியாக, ஆயிரத்து
நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரபிய நாட்டில் தோன்றி
ஆண்டவன்
ஒருவன் என்னும் மரபினை வாழச் செய்தவர் அண்ணல்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் ஆவார்,
அல்லாவின்
தூதரிடத்து நீங்கள் பின்பற்றியொழுக, உங்களுக்கு
அழகிய
முன்மாதிரி இருக்கின்றது.(திருக்குர்ஆன் 33:21)
முகம்மது
முற்காலத்தவர்க்கும் பிற்காலத்தவர்க்கும்
ஆசான்
(திருக்குர்ஆன். 64:1)
போன்ற
திருக்குர்ஆன் மணிமொழிகள் செம்மல் நபியின்
சிறப்புகளைச்
செப்புவனவாக உள்ளன.
“மதத்தலைவர்கள் அனைவரிலும் தலைசிறந்த வெற்றியாளர்
முகம்மது
நபியே!” என்று பிரிட்டானியக் கலைக்களஞ்சியம்
கூறுகின்றது.
“உலக வரலாற்றிலேயே அற்புதமான மாறுதலை உண்டாக்கியவர்
முகம்மது”
என்கிறார் லியோ டால்ஸ்டாய்.
“சகோதரத்துவத்தை
உலகிற்குக் கொண்டு வந்த இறைத்தூதர் முகம்மது
ஆவார்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். “பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி,
மனிதனை மனிதனாக வாழச் செய்தவர் முகம்மது நபி”
என்கிறார்
டாக்டர் அம்பேத்கார்.
இவ்வாறு
அரசியல் தலைவர்களாலும், ஆன்மீக ஞானிகளாலும்,
வரலாற்று
மேதைகளாலும், போற்றப்படுகின்ற பெருமைக்குரியவர் பெருமானார்.
அதனால்
தான் உலகின் மிகச் செல்வாக்கு வாய்ந்த நூறு
சாதனையாளர்களின் பட்டியலைத்
தொகுத்து “The 100” என்ற நூலை எழுதிய மைக்கேல் ஹார்ட் அவர்கள் கூட
அந்த நூற்றுவரில் முதலிடத்தை முகம்மது நபி அவர்களுக்குத் தந்து,
நாயகப்
பேரொளியே, நானிலத்தின் மாமனிதர் என்று நிறுவுகிறார்.
இத்தனை
சிறப்புகளுக்குரிய அண்ணல் நபியைத் தமிழ்க்
கவிஞர்களும்
போற்றிப் புகழத் தவறவில்லை. உமறுப்புலவரில்
தொடங்கிச் சதாவதானி
செய்குதம்பிப் பாவலர் வரை நூற்றுக்கணக்கான கவிஞர்கள்
பாமாலைகளாகவும்,
சிற்றிலக்கியங்களாகவும் பாடிப் புகழ்ந்துள்ளனர்.
எல்லாவற்றிற்கும் மேலாகச்
சந்தேகத்துக்கு இடமற்ற சரித்திரச் சான்றுகள்
|