ஒன்றை எல்லையைக் குறிக்கும்படி பணிந்தார்.
இவர் கட்டளைப்படி பாம்பும் நகரைச் சுற்றிலும் வளைந்து கிடந்து எல்லையைக் குறித்துக்
காட்டியது. பாம்பு எல்லைக் குறித்தமையால் மதுரைக்கு ஆலவாய் என்று ஒரு பெயரும் பின்னர்
வழங்குவதாயிற்று.
48.
மரக்கால் ஆடியது: உலகத்துக்குத் துன்பம் இழைக்க வேண்டிப் பாம்பு தேள் முதலிய
நச்சுப் பூச்சிகளின் உருவெடுத்துப் பெருகிய அவுணர்களை இறைவி மரத்தாற் செய்த கால்களின்
மேல் ஏறி நின்று கூத்தாடி உழக்கி அழித்தாள். இவ்வாறு ஆடிய கூத்திற்கு 'மரக்கால்
கூத்து' என்பது பெயர்.
49.
மாணிக்கம் விற்றது: வீரபாண்டிய மன்னன் வேட்டைக்குச் சென்ற காலத்து, புலியால்
தாக்குண்டு இறந்தான். அவன் மகனாகிய இளவரசனுக்கு உரிய முடி, கலன்கள், முதலியவற்றைத்
தாயாதிகள் கவர்ந்து, வேறு தேசம் சென்றனர். இதனால் இளவரசனுக்கு முடி சூட்ட வேறு கிரீடம்
செய்ய வேண்டியதாயிற்று. அமைச்சர்கள் பெருங் கவலையுடன் அரசிளங் குமரனையும் உடன்கொண்டு,
ஆலவாய்ப் பெருமான் கோயிலுக்குச் செல்ல, கோபுர வாயிலில் இறைவனே வணிகனாய் வந்து,
மன்னனுக்கு வேண்டும் மாணிக்கம் கொண்டு வந்து விற்று, 'இந்த மணிகளால் முடிசெய்து சூட்டி,
இவ்வரசனை அபிடேக பாண்டியன் என வழங்குக' என்று அருளினார். வணிகனுக்கு உரிய பொருளைக்
கொடுக்க முற்படும்பொழுது வணிகனாய் வந்த பெருமான் மறைந்தருளினார். அரசிளங்குமரனும்
அமைச்சர் முதலியோரும் பெருமானுடைய கருணையை வியந்து போற்றினர்.
50.
மாமனாக வந்தது: ஒரு வணிகன் தன் மருமகனைப் பிள்ளையாகக் கொண்டு, தன் செல்வம்
முழுவதையும் அவனுக்கே கொடுத்து, வடநாடு சென்று மறைந்தான். அப் பொருளைக் கவர வேண்டி
அவன் தாயத்தார் வழக்குத் தொடுத்தனர். துணை ஒன்றும் இல்லாத அம் மருமகன் ஆலவாய்
அண்ணலிடம் முறையிட, அப் பெருமானே அவனுடைய மாமனாக எழுந்தருளி, வழக்கைத் தீர்த்துப்
பெற்ற பொருளை நிலைநிறுத்தினார்.
51.
மாமியாடக் கடல் அழைத்தது: தடாதகைப் பிராட்டியார், தன் தாய் காஞ்சனமாலை
கடலாட விழைந்ததை நிறைவேற்ற எண்ணி, ஆலவாய் அண்ணல்பால் தெரிவித்தாள். இறைவனும்
அம்மை விருப்பத்திற்கு இணங்கிக் கடலை மதுரையிலே வரவழைத்தருளினார்.
52.
மார்க்கண்டர்: 17 ஆவது கதை பார்க்க.
53.
மாறி ஆடியது: பல கலைகளிலும் வல்லவனாக இருந்த பாண்டியன் ஒருவன் நாட்டியக் கலையிலும்
வல்லவனாக வேண்டும் என்ற நோக்கத்தோடு பயின்றபோது, பயிற்சியால் உடலுக்குளதாம்
அயர்ச்சியைத் தானே நேரில் கண்டு, எப்பொழுதும் கால்கள் மாறாது ஒரே வண்ணமாக ஆடுகின்ற
வெள்ளி அம்பலக்கூத்தன் மேல் பரிவு கொண்டு, கால்மாறி ஆட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதற்கு
இரங்கி, வெள்ளியம்பலக்கூத்தன் அவ்வாறே செய்தருளினான்.
54.
முப்புரம் எரித்தது: வானத்தில் பறக்கும் வலிமை பெற்ற பொன், வெள்ளி இரும்புக்
கோட்டைகளைக் கொண்டு, மூன்று அரக்கர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தார்கள்.
தேவர்கள் எல்லாம் தேராகவும் படைக்கலமாகவும் மாறி, சிவபெருமானைத் தேரில் ஏற்றிக்கொண்டு,
அவ்வசுரர்களோடு போருக்குப் புறப்பட்டனர். சிவபெருமான், தேவர்களுடைய துணையை வேண்டாமலே,
நகைத்து அம் முப்புரங்களையும் எரித்தார்.
55. முருகன்: குறிஞ்சிநிலத்
தெய்வம்; சிவபெருமானுடைய இளைய பிள்ளை; சரவணப் பொய்கையில், கார்த்திகையாகிய
ஆறு தாயர்களால் வளர்க்கப்பெற்றவர்; நாரதன் வேள்வியில் தோன்றிய ஆட்டுக்கிடாயை
அடக்கி, வாகனமாகக் கொண்டு விளையாடியவர்; பிரணவத்தின் பொருளைத் தந்தைக்கு
|