நூலாசிரியர் வரலாறு
|
செந்தமிழணங்கிற்கு
அணிபல புனைந்து அழகுபடுத்தியவர் நல்லிசைப்
புலமை வல்லுநர் பலராவர். அவருள் ‘தஞ்சைவாணன்
கோவை‘யை அணிந்து
மகிழ்ந்த புலவர் பெருமானார் பொய்யாமொழிப் புலவரும் ஒருவராவர்.
|
இவர் தொண்டை
மண்டலத்தில் சைவ வேளாண் குடியில் தோன்றியவர்.
இவர் தம் இளமைப் பருவத்தில் வயிரபுரம் என்னும் ஊரில் ஒரு தமிழாசிரியர்பால்
கல்வி பயின்று வந்தார். ஒரு நாள் தம் ஆசிரியர் தம்
பயிர்க்கொல்லையைக்
காத்துவரக் கூறினார். அவ்வாறே சென்று காவல் புரிந்தார்; அப்போது
அங்கிருந்த
காளி கோயில் ஒன்றின் பக்கலில் ஒரு மர நிழலில் படுத்துறங்கினார்;
அப்போது
பயிர்களைக் குதிரையொன்று வந்து மேய்வதாகக்
கனவு கண்டார்; உடனே
விரைந்து சென்று அக் குதிரையை ஓட்டினார்.
ஓட்டியும் அது, அப்
பயிர்
மேய்வதை விட்டுச் செல்ல வில்லை. உடனே
காளி கோயிலுக்குச் சென்றார்;
காளியை வணங்கினார். தம் ஆசிரியர்க்குப் பிழை செய்ததாகக்
கருதி, அப் பிழை
நீங்க அருள்புரிய வேண்டிக் காளியை வாழ்த்தினார்; காளிதேவி
அவருக்கு நேரில்
காட்சியளித்து அருள் செய்து மறைந்தனள்.
|
காளியின் அருளால்
கல்வியுணர்ச்சியும் பாப்புனையும்
திறனும்
கைவரப்பெற்றார். அக் கொல்லையின் பயிர்
அக் குதிரையால் அழிவுற்றதற்குச்
சினந்து,
|
|
‘வாய்த்த வயிரபுர மாகாளி அம்மையே
ஆய்த்த மணலில் அணிவரையில் - காய்த்த
கதிரைமா ளத்தின்னும் காளிங்கன் ஏறும்
குதிரைமா ளக்கொண்டு போ‘ |
என்னும் வெண்பாவைப்
பாடினார். அதுபோழ்தே அக் குதிரை கீழே வீழ்ந்து
இறந்தது.
|
அதனைக் கண்ட
அருகிலிருந்தோர் இவர்தம் ஆசிரியரிடம்
போய்க்
கூறினர். ஆசிரியர் வந்து நேரிற் பார்த்தார்; ‘இது காளிங்கராயன்
குதிரையன்றோ; அவன் அறியின்யாதாமோ!‘
எனக் கலங்கினார். அதனை அறிந்த பொய்யாமொழிப் புலவர், அவ்
வெண்பாவின் ஈற்றடியை மட்டும் ‘குதிரைமீ ளக்கொண்டு வா‘ என்று
மாற்றி பாடினார். குதிரை உயிர்பெற்றெழுந்தது.
இதனைக் கண்ட யாவரும்
வியப்புற்றனர். ஆசிரியர் தம் அருமை மாணவரைத்
தழுவினார். அவர்தம்
வாக்காகிய பாட்டு, தப்பாமல் குறித்த பயனைத் தந்ததை
வியந்து பாராட்டினார்.
அவர் அதுகாலை,
|
|
‘பொதியில் அகத்தியனாய்ப் பொய்யா
மொழியாய்ச்
சிதைவில் புலவர் மணியாய்த் - துதிசேரும் |