xix

ஏனை மண்டிலந் தம்மினும் வள்ளலர் புலவர்
மானவீரர்க ளருந்தவர் விம்மித மலிந்த
தான கொங்கு மண்டல சதகத்தினை யாய்ந்து
போன போனபல் லிடந்தொறும் புதுவது போற்றி.

ஆண்டு பற்பல வொழிதர சிலையெழுத் தாதி
வேண்டு சாதன மைதிக மிவையெலா மிகுத்து
யாண்டு மொப்பிலா விளக்கமுங் கூட்டியிங் களித்தான்
ஈண்டு பேருப காரமிஃ தொப்பவே றெதுவே.

குமாரமங்கலம் கி.மு.ப. ஆறுமுகம் பிள்ளையவர்கள்

ஆசிரியப்பா

பூவிரிந் தோங்கப் பூவிரிந் தொளிரும்
காவிரிந் தெங்குங் காவிரி தங்கும்
பருமணி கொழிக்குந் திருமணி முத்தா
நதிவளம் பலவுங் கதிவளங் குலவும்
சீர்தருங் கற்பகத் தார்தரு நிழற்கீழ்
அரசுவீற் றிருக்குஞ் சுரபதி சுரரும்
பொன்னுல கென்ன மண்ணுல குன்னப்
பொங்குதண் டலைசூழ் கொங்குமண் டலத்தில்
தலைதனைக் கொடுத்த நிலைபுகழ்க் குமணன்
ஓவா நிலை பெறுஞ் சாவா நிலைதரும்
ஆமல கக்கனி தாமுல குக்கினி
தாகவன் றௌவைக் ககமகிழ் வெய்த
உதவிய வதிக னுயர்நிதி யாளன்
மஞ்ஞை நடிப்ப வளர்குளிர் நடுக்க
மென்ன மயிலுக் கிதய முருகி
போர்வை போர்த்த புகழ்ப்பெரும் பேகன்
எழுகடல் குடித்த விழுமிய குறுமுனி.
புகழ்தருங் கொல்லிப் பொருப்பன் வரையாது
வாரிக் கொடுத்த ஓரிப் பெரும்வள்ளல்
புதிய கோட்டைகளெலாம் புகழ் தருமாதி
பழைய கோட்டைப் பதிவளர் கோமான்
தனிமுதற் கவிஞன் தாய் முதுகேறச்
சேய்முக நோக்கச் சிந்தை மகிழ்ந்த
சாந்தப் பெருங்கடல் சர்க்கரைக் கோமான்
சங்க மருவுஞ் செங்குன் றூர்க்கிழார்
எங்கும் புகழும் கொங்கு வேளிர்
என்னூ லாரு மியாண்டும் வழங்க