xx
|
நன்னூல்
முன்னம் நவில்பவ ணந்தி
முடியாப் பொருள்விரி அடியார்க்கு நல்லார்
பற்பல வீரர் பகர்கொடை யாளர்
விற்பன விவேக விழுமிய மேலோர்
அற்புத மாக வமர்ந்திடுங் கொங்கு
மண்டல சதகம் வரைந்தனன் விஜய
மங்கல மூதூர் வந்தகார் மேகம்
அன்னவான் றமிழ்ப்பொரு ளறிஞர்க டேற
அம்மை யப்ப ராயசெங் குன்றூர்
தன்னில் வந்த சத்திய சற்குணன்
தென்மொழி வடமொழி திகழாந் திரமுதல்
பன்மொழிக் கடலும் பருகும் படரிசை
இலக்கண விலக்கிய தெழுவரம் பிசைத்தோன்
செப்பிய வாகமத் திப்பிய பொருளும்
சைவ சித்தாந்தத் தெய்வ நன்னூலைக்
கற்றுணர்ந் தடங்கு நற்றவப் பெரியோன்
நங்கோட்டந் தவிர் செங்கோட்டு மான்மியம்
ஞானப் பேரொளி ஞான திவாகரன்
விரிசடைக் கடவுள் விளக்க முற்றிலகு
வெஞ்சமாக் கூடல் மேதகு புராணம்
தெள்ளிய தமிழாற் செப்பிய வள்ளல்
திருவா வடுதுறைத் தேசிக னன்பாய்
வருவாய் நோக்கு மனமகிழ் சீலன்
பூம்பழ னிப்பதி மாம்பழக் கவிஞன்
பன்னா ளிருந்து சின்னா ளறிந்து
மெச்சின னென்று விருதுசிலை வழங்கும்
கோதுபதி யாதவன் சேதுபதி யாதவன்
தம்முன் னெடுநாள் வம்மினென் றழைத்தே
தள்ளரு நட்பின் சார்புறத் தழுவி
உள்ள நெக்குருக வுரோமஞ் சிலிர்ப்பப்
பேர்பெறும் வரிசைச் சீர்தரப் பெற்றோன்
சதகந் தனக்குச் சாதக மாக
நாற்றிசை மேற்றிசை போற்றிசை பரவ
பற்பல ரறியப் பார்மே லிதனை
அற்புதந் தரநல் லஞ்சன மேய்ப்ப
விரிவுரை பதவுரை விளங்கும் பொழிப்புரை
தெளிவுற வோருரை செய்தச் சேற்றினன்
அட்டாவ தானத் தரும்புகழ் பெற்ற
வித்தக ஞான விவேகமார்
முத்தமிழ் முத்துச் சாமிமொய் தவனே. |
| |