இந்நாட்டி
னறிவொழுக்க மேந்திழையா
ரறவொழுக்க
மிகை யீரம்
மன்னாட்டுப் படைமிடையும் வள்ளன்மார்
கொடைமடமும்
மறவோர் வீரம்
சொன்னாட்டுப் புலவருரை துகளறுத்தோர்
நிறையுரையும்
துலங்கு மற்ற
பன்னாட்டத் துறைபரப்பில் படிந்துமுகந்
துளங்கொண்டு
பரிவா லம்மா (2)
பார்மீது
சதகமெனப் பைந்தமிழ்நூல்
பலகற்ற
பயனா லென்றும்
ஓர்மூன்று குடையுடையான் அடியுடையான்
உளசமய
மொன்றும் நோவாச்
சீர்மேவிச் சினங்கடிந்து செம்மையறம்
வளர்த்துநலஞ்
சிறந்த கோமான்
கார்மேகங் கவிமேக மெனப்பொழிந்த
கலித்துறையின்
கவின்றா னென்னே (3)
கார்பொழிந்த
கவிநீருங் கலித்தோடக்
கால்கோலிக்
கருத்தி லாழ்ந்து
தேர்புலவ ராராய்ந்து திரிபறுக்கக்
காட்டுகளுந்
தேடிக் கூட்டி
ஊர்பலவு மாண்டுகளா யோடியுழைத்
துரைகண்டே
யூன்று மச்சுத்
தேர்புகுத்தித் தமிழருக்குச் சிறப்பாக
விருந்தளித்த
செல்வன் யாரே (4)
வெங்கோட்டச்
சூர்கடிந்த வேற்கரத்தன்
திருவருட்கு
வைப்பா யுள்ள
செங்கோட்டுப் பதிவந்தோன் திருமூலர்
குலத்துதித்தோன்
சேரஞ் ஞானம்
இங்கோட்டு நூலாய்ந்து மியனூல்கள்
பலயாத்து
மெந்தை வேளைப்
பைங்கோட்டு மலர்கொண்டு பணிமுத்துச்
சாமியெனும்
பாவல் லோனே (5)
|