(2) ‘பண்ணுகவ யக்களிறு பண்ணுக
     வயப்புரவி பண்ணுகக ணிப்பில் பலதேர்’

என்பன வந்த சொல்லே வந்து இன்பஞ் செய்தன.

(1) ‘தனுக்கோட்ட நமன்கோட்டம்
     பட்டதுசக் கரக்கோட்டம்’
(2) ‘ஒருக லிங்கம் ஒருவ னழித்தநாள்
     ஒருக லிங்கம் ஒருவ ருடுத்ததே’

என்பன திரிபும், யமகமுமாம் சொல்லணிகளாம்.

இனித்,  தாங்  கூறக்  கருதிய  பொருளை  மறைத்து   வேறொன்று
கூறுவார்  போல்   மொழிந்து   தாங்   கருதிய    பொருளைச்   சிறக்கப்
புலப்படுத்துவார்.   இது   பிறிது   மொழிதல்  அணி   எனப்படும்.

குலோத்துங்கன்  இளவரசுப்பட்டம்  எய்தியதும்,  வடதிசை நோக்கிச்
சென்று,  சென்றவிடமெல்லாம்  பகைவரைப்   பொருது  வெற்றிகொண்டான்
எனக்  கூறவேண்டியவர்,

‘சரிக ளந்தொறும் தங்கள் சயமகள்
     தன்னை மன்னப யன்கைப் பிடித்தலும்
பரிக ளுங்களி றுந்தன ராசியும்
     பாரி போகங் கொடுத்தனர் பார்த்திபர்’

என்கிறார்.

குலோத்துங்கனது    படைக்காற்றாது    கலிங்கர்   பிழைத்தோடிய
செய்தியை  உணர்த்தப்  புகுந்தவர்,

‘போரில் இன்றுநம் முதுகுசெயும் உபகாரம் என்பரே’'

என்றார்.

இனி,   ஒன்பதுவகைச்   சுவைகளும்  கனிந்து   நிற்கத்   தாழிசை
அமைந்திருக்குமாற்றைக் காண்போம்.

(1) பேய்கள்   கூழ்வார்த்துக்கொண்டு   செல்லுங்கால்  ஒரு   பேய்,
வெட்டுண்டு   கிடந்த  ஒரு யானைத்  துதிக்கையை  எடுத்துத் தன் பல்லில்
பொருத்தி   வைத்துக்கொண்டு,   அத்துதிக்கையில்   மற்றொரு   நுனியில்
கூழை  வார்  என்று