சொல்லியதாகக் கூறும் பகுதி 'நகைச்சுவைக்' குச்சிறந்ததோர்
எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.
‘துதிக்கைத் துணியைப் பல்லின் மேல்
செவ்வே நிறுத்தித் துதிக்கையின்
நுதிக்கே கூழை வார் என்னும்
நோக்கப் பேய்க்கு வாரீரோ.’
|
(2) போர் முடிந்தபின், திரும்பிவராத தன் கணவனைத் தேடிப்
போர்க்களத்துக்குப் புறப்பட்டுச் சென்ற ஒரு மங்கை, போர்க்களத்தை
அடைந்து, முகம், கை, கால் முதலியன வேறு வேறாக வெட்டுண்டு
கிடந்த தன் கணவனைக் கண்டு வருந்திக்கூறி நின்ற நிலை 'அழுகைச்' சுவையில் மேம்பட்டு நிற்கின்றது.
‘பொருதடக்கை வாள் எங்கே மணிமார் பெங்கே
போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோளெங்கே எங்கே என்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்.’
|
(3) கலிங்கப்போரில் தோற்றோடிய கலிங்கவீரர் சிலர்,
போர்க்களத்தில் கிடந்த யானை மணிகளையே கைத்தாளமாகக்கொண்டு,
பாணர்போன்று நடித்து, அப்போர்க்களத்தினின்றும் நழுவி ஓடிய
செய்தியைக் கூறுமிடம் 'இழிவுச்' சுவை விளங்கத் தோன்றுவதாகும்.
'சேனைமடி களம் கண்டேம் திகைத்து நின்றேம்
தெலுங்கரேம் என்றுசில கலிங்கர் தங்கள்
ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்
டடிப்பாணர் எனப்பிழைத்தார் அநேகர் ஆங்கே '
|
(4) கலிங்கப் போருக்கெழுந்த நால்வகைப் படையின் பெருக்கத்தைக்
கூறுகின்றவிடத்து 'வியப்புச்' சுவை பொலிந்து தோன்றுகிறது.
‘அகில வெற்புமின் றானை யானவோ
அடைய மாருதம் புரவி யானவோ
முகில னைத்துமத் தேர்க ளானவோ
மூரி வேலைபோர் வீர ரானவோ’.
|
|