(9) முதுபேய்  ஒன்று  காளியின் சினவலையிற்பட்டு அஞ்சி நெடுநாள்
மறைந்து,  உறைந்திருந்து,  பின்  ஒரு  கால்  அக்காளி முன்வரக் கட்டளை
பெற்று  அவள்  திருமுன் வரலுற்றது. இதைக் கூறப்புகுகின்றார் ஆசிரியர் :

'அழைக்க என்றலும்அ ழைக்க வந்தணுகி
     அஞ்சி அஞ்சிஉன தாணையில்
பிழைக்க வந்தனம் பொறுத்தெமக் கருள்செய்
     பெண்ண ணங்கெனவ ணங்கவே.'

காளிமுன்   வருவதற்குமுன்   அஞ்சிய    முதுபேய்    வருங்கால்
செம்மையாக    வராமல்,    தழுதழுத்த    நடையுடன்முன்    செல்வதும்
பின்வாங்குவதுமாய்   நடந்து  வருவது  போல  இத்தாழிசையின்  சந்தமும்
அறுந்தறுந்து  நடைபெறுமாறு காண்க.

8. பரணியைப்பற்றிப் பிற ஆசிரியர் கூறியவை

சைவ    இலக்கியங்களுக்கும்     சமண    இலக்கியங்களுக்கும்
நடுநிகர்த்ததாய்ச் சிறந்திலங்குஞ் சீருடைச் சிறுகாப்பியம் கலிங்கத்துப்பரணி
யாகும்.   அது   முதற்குலோத்துங்க   சோழன்   காலமாகிய   (1078-1118)
பதினோராம்      நூற்றாண்டின்      பிற்பகுதியில் சயங்கொண்டாரால்
இயற்றப்பெற்றது.  பரணியென்பது  போரில்  ஆயிரம்  யானையை வென்ற
வீரனைப் பாடும் பிரபந்தம். போரினின்று மீண்ட தலைமகன்பாற் புலவியுற்ற
தலைமகளது  ஊடலைத்  தீர்த்தற்  பொருட்டுப்  புலவர்கள் வாயிலாதலும்,
புலவியாற்றிய   பின்னர்,   தலைவன்  சென்ற  காட்டின் கொடுமையையும்
தலைவன்   வீரத்தையும்,   அக்   காட்டிலுள்ள   பேய்கள்    காளிக்குச்
சொல்லுவதையும், காளி பேய்கட் குரைப்பதையும் எடுத்தியம்பும்  வடிவுடன்
பரணி  யென்பது  திகழும் குலோத்துங்க  மன்னன் கலிங்கத்தை  வென்று
மீண்டதை  இப் பரணி   புனைந்து   கூறுகின்றது.  கலிங்கத்துப்பரணியே
அவ்வகைப்  பிரபந்தத்துட்  சிறந்ததாயும், முதன்மையாயு  முள்ளது. இதன் ஆசிரியர்  தீபங்குடியைச்  சார்ந்தவ