வரியின் இடையில் "காணப்படினும்" என்பதற்குப் பின் சேர்த்துப் படித்துக் கொள்க. பக்கம் 37 வரி 18 இல், ‘தயிர்த் துண்டுகளே” என்பதைத் “தயிர்த் துண்டுதான்” என்று திருத்துக. "பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர" என்பது முத்தொள்ளாயிரம்.
"பாறாட இஃதோர் பருந்தாடல் காண்மின்களோ" என்பது கலிங்கத்துப்பரணி.
“கழுகுக் குஞ்சுகள் மழையால் மிகவும் நனைந்து உதிர்கின்றதைக் கண்ட முதிர்ந்த சேவற் கழுகுகள் முறையிட அது கேட்ட பேடைக் கழுகுகள் பறந்து சென்று குஞ்சுகளின்மேல் சிறகைப் பரப்பிக் காத்தன” என்ற பொருள் கொள்ளும் வண்ணம்: "முதிரும் பாறு முறையிடக்-கழு" குதிரும் பாறு சிறையிட என்று பாடியிருத்தல் கண்டு பாறு என்பதற்குக் கழுகு என்று (பக்கம் 69 இல்) பொருள் கொள்க.
ஒவ்வொரு பாட்டின் உரையின் இறுதியிலும் ஆராய்ச்சிக்குப்பயன்படும் வண்ணம் பாடவேற்றுமைகளையும் குறித்திருக்கின்றேன். இதுவரை மிகப் பல பாடல்களுக்குத் தவறாகப் பொருள் கொண்டு எழுதியும் சொல்லியும் வருகின்ற பிழைகளை நீக்குவதற்கும் நல்லுரை தெரிந்துகொள்ளவும் இப் பதிப்பு மிகவும் துணைபுரிதல் காண்க. முக்கூடல் 'முக்கூடல்' என்னும் ஊர் திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநையும் சிற்றாறும் மற்றொரு காட்டாறும் கூடும் இடத்தில் வடபால் அமைந்துள்ள ஊர். பொருநையின் வடபால் அமைந்த முக்கூடல் ஆசூர் வடகரைநாடு என்று பெயர் பெற்றது. தென்பால் உள்ளநாடு சீவலமங்கைத் தென்கரைநாடு மு.-2 |