முகப்புதொடக்கம்
முன்னுரை19

றியவர் என்னயினாப் புலவர். இவரையே முக்கூடற்பள்ளு ஆசிரியர் என்று இக்காலத்தில் பலர் தவறாகக் கூறுகின்றனர். பழைய பதிப்பில் குறிப்பிட்டுள்ள இராக தாளம் சந்தம் இப் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நூலின் அமைப்பு

பொதுவாகத் தமிழ் நாடெங்கும் பரவிக் கிடக்கும் பள்ளு நூல்களெல்லாம் முத்தமிழ் நூல்களாக இலங்குவது மட்டுமன்றிப் பண்டைத் தமிழரசர்கள், வேளிர்கள், குறுநில மன்னர்கள், மன்னரின் பின்னோர்கள், வள்ளல்கள் முதலிய எல்லோர்களின் வரலாற்று நுட்பங்களும் விளங்கச் செய்கின்ற கருவூலங்களாகவுந் திகழ்கின்றன. இந்நூல் அகப்பொருள் நூலைப் போன்று கிளவித்தலைவன் தலைவியர்களின் சிறப்புப்பெயர் கூறாமல், பொதுப்பெயர் கூறியே நடக்கின்றது. முக்கூடற்பள்ளனின் சிறப்புப் பெயர் கிளக்கவில்லை. பாட்டுடைத்தலைவனாகிய திருமாலின் பெயராகிய வடிவழகன் என்ற பெயரை இவனுக்கு ஏற்றி வடிவழகக் குடும்பன் என்று கூறுகிறது. அவன் மனைவியர் இருவருள் மூத்தபள்ளியை முக்கூடற்பள்ளி என்றும் இளையபள்ளியை மருதூர்ப்பள்ளி என்றும் குறிப்பிடுகின்றது.

முதலில் ‘பூ மேவு’ என்று காப்புச்செய்யுள் தொடங்கி ‘மாமேவு முக்கூடல் மாலழகர் இந்தப் பள்ளிசைக்குச் சொல் வழங்கிப் புரப்பார், பத்து ஆழ்வார்களும் பாவலரும் நாவலரும் பத்தர்களும் காப்பாம்’ என்று காப்புக் கூறுகின்றது. பின்பு திருமால், கருடாழ்வர், சேனைமுதலியார், நம்மாழ்வார் ஆகிய இவர்களுக்கு வணக்கம் கூறுகின்றது.

நடிக்கிற நாடகத்தில் இடையிடையே ஆசிரியன் வந்து விளக்கம் கூறுவதுபோல் நூலின் இடையிடையே கவிக்கூற்றாக வரும் கொச்சகக்கலிப்பாக்கள் நாடக உறுப்பினரின் வருகை முதலிய கருத்துக்களை விளக்குவனவாகவும் கவிதைச்சுவை நிரம்பித் தெவிட்டாத இன்பம் தருவனவாகவும் மிளிர்கின்ற தன்மைகளை ஓதி ஓதி உணர்க.

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்