முகப்புதொடக்கம்
முன்னுரை21

"சோதிமுகம் மள்ளருக்கே தோன்றவய லுற்றுநட்ட
 போதிலொரு பூவிலைந்து பூவும் பயிராமே"

என்கின்றார். பின்பு பள்ளன் தோன்றித் தன் பெருமை கூறுகின்றான். பள்ளியர்கள் இருவரும் மாறிமாறித் தங்கள் பழங்குடிப் பெருமைகளைக் கூறிப் பெருமிதப்படுகிறார்கள். பின்பு இருவரும் தங்கள் தங்கள் நாட்டுவளம் நகர்வளங்களைக் கூறுகின்றார்கள். மழை பெய்வதற்குக் குயிலாகிய மேகத்தைக் கூவ வேண்டிக் குயிலுக்குக் கட்டளையிடுகின்றார்கள். தாங்கள் வழிபடு கடவுளைப் போற்றுகிறார்கள். தெய்வநிலை போற்றியபின் மழை பெய்வதற்கு அறிகுறியுண்டாகின்றது. மழைக்குறி கண்டு ஆடிப் பாடுகின்றார்கள். மழை பெய்கின்றது. ஆற்றுவெள்ளம் ஐந்திணை நெறியளாவி வருகின்றது; கதை வெள்ளமும் ஐந்திணை நெறியளாவிப் பாய்கின்றது. பின்பு பண்ணைக்காரன் தோன்றுகின்றான். மூத்தபள்ளி பள்ளனின் குறைகளை எடுத்துச் சொல்லி முறையிடுகின்றாள். “கால்வாய், அணை முதலிய காக்க வேண்டியவற்றைக் காப்பதும் இல்லை; கட்டின மாட்டைத் தொட்டு அவிழ்ப்பதும் இல்லை; உழுவதற்கென்று தார்க்கோலைத் தொடுவதும் இல்லை; யான் சோறிட்டாலும் ஏறிட்டுப் பாரான்; சட்டியைக் கொண்டு ஓங்கும் இளையபள்ளியாகிய மருதூராளை விருதுக்கு வைத்திருக்கின்றான். பட்டடை நெல்லெல்லாம் கள்ளுக்கு வாரி இறைத்துவிட்டான்” என்று முறையிடுகின்றாள். பண்ணைக்காரன் இளையபள்ளி வீட்டிற் போய்ப் பள்ளனை எங்கே என்று கேட்கிறான்; அவள் பள்ளனைக் குச்சுக்குள்ளே மறைத்து வைத்துக்கொண்டு பண்ணைக்காரனிடம் பேசுகின்றாள்.

“குடிலிற் படுத்துக் கிடந்த பள்ளனை முந்தாநாள் விடியுமுன்பு முக்கூடற்பள்ளி கூப்பிட்டு வேலைக்குப் போகச் சொன்னாள்; அவனும் போனான்; ஆற்றிலும் வெள்ளம் மேன்மேலும் வந்துகொண்டிருக்கிறது; என்ன நடந்ததோ தெரியவில்லை. மூன்று நாளாய் அவன் வரவில்லை; உங்கள் அடிமையாகிய எனக்கு நேற்று இரவெல்லாம் உறக்கமில்லை; அழகருக்குத்தான் தெரியும்; முப்பழமும் சோறும் உண்ணும்படியாக அவனை நடத்திக்கொண்டீர்; உங்கள் பழைய அடியானும் புறப்பட்டான். கலுங்கில் தண்ணீர் நிலையாது என்று சொன்னார்கள்;

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்