முகப்புதொடக்கம்
முன்னுரை23

ளியர் இருவரும் வந்து ஏங்கியழுகின்றனர்; பின்பு தெளிந்து சிரிக்கிறான்; பின்பு தொளி உழவு நன்றாய் உழுது நடுகின்றனர். நடுகையின்போது உண்டாட்டின் மயக்கத்தால் ஏற்படும் காதல் விளையாட்டுக்கள் கூறப்படுகின்றன; நெல்விளைகிறது; அடித்துக் குவித்து எல்லோருக்கும் கணக்குச் சொன்ன பள்ளன் மூத்த பள்ளிக்கு ஒழுங்கு செய்யவில்லை. அவள் முறையிடுகிறாள். இளையபள்ளியும் மூத்தபள்ளியும் ஒருவரை ஒருவர் ஏசுகின்றார்கள். தெய்வ விளையாட்டுக்களை எடுத்துக் கூறி வசைகூறி ஏசி இருவரும் சாந்தமாகி இணங்கிக் கிளையுடன் கூடிவாழ்கின்றார்கள். இவைகளே நூலில் சொல்லப்படும் பொருள்கள். ஒன்பான் சுவையும் இந்நூலில் அமைந்துகிடப்பதுபோல் ஏனைய நூல்களிற் காண்டல் அரிது. வியப்புச் சுவை முன்பு காட்டப்பட்டது. இன்னும் ஒன்று நோக்கி ஏனையவற்றையும் பார்ப்போம்.

1. சுவைநலம்

(1) குருந்தி என்பவள் தன் பருவம் வரும் முன்பு சிறு பெண்ணாகத்தான் இருந்தாள்; முந்திய ஆண்டு நடுகை நடும்போது அவளை ஒருவரும் பொருட்படுத்தவில்லை; ஆனால், இப்போது என்ன விந்தை?

"கொண் டாடிக்கொண்டு நடச்செய்து-இன்று
 கண் டோமிதென்ன புதுமையோ
 தொடை யென்றால் வாழைத் தண்டைப்போல்-விழிக்
 கடையென்றால் கணை ரெண்டைப் போல்
 சொருக்கென் றால்மேகப் படத்தைப்போல்-முலை
 நெருக்கென் றாலிணைக் குடத்தைப் போல்
 இடையென் றால்வஞ்சிக் கொடியைப் போல்-வரும்
 நடையென் றாலிளம் பிடியைப் போல"

இருந்த சாயலுக் கிப்பால் குருந்தி
திருந்தி னாளடி பள்ளீரே”

என்று அவள் இடையையும், தொடையையும், நடையையும், விழிக்கடையையும், கொங்கையாகிய இணைக்குடத்தையும், கூந்தலாகிய மேக படத்தையுங் கண்டு பெண்களே மருண்டு வியந்து கூறுகின்றார்கள். பாட்டின் அடிகளும் நளினமும்

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்