முகப்புதொடக்கம்
24 முக்கூடற் பள்ளு

வியப்புடன் அவள் வடிவம் போல் அமைந்து சுவைநலம் உண்டாக்குகின்றது.

2. வீரம் (பெருமிதம்)

பள்ளியர்கள் தங்கள் நாட்டுவளம் கூறும்போது பெருமிதமாகக் கூறிக் கொள்கின்றார்கள்.

கொண்டல் கோபுரம் அண்டையிற் கூடும்
கொடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டந் தண்டலை நாடும்
கனக முன்றில் அனம்விளையாடும்
விண்ட பூமது வண்டலிட் டோடும்
வெயில்வெய் யோன்பொன் னெயில்வழிதேடும்
அண்டர் நாயகர் செண்டலங் காரர்
அழகர் முக்கூடல் ஊரெங்கள் ஊரே.

இப் பாடலில் முன் மூன்றடிகள் வியப்புச்சுவை பயப்பனவாக இருந்தாலும் “அழகர் முக்கூடல் ஊரெங்கள் ஊரே” என்பது எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு பெருமிதச் சுவை தருகின்றது.

சங்கம் மேடைகள் எங்கும் உலாவும்
தரங்க மீன்பொன் னரங்கிடை தாவும்
திங்கள் சோலை மரங்களை ராவும்
தெருக்கள் தோறு மருக்களைத் தூவும்
பொங்க ரூடிளம் பைங்கிளி மேவும்
பூவைமாடப் புறாவினங் கூவும்
வங்க வாரிதி வெங்கடு வுண்ட
மருதீ சர்மரு தூரெங்கள் ஊரே.

என்பதிலும் இறுதியில் வீரச்சுவை காண்க.

"உழப் பார்க்குந் தரிசென்று
கொழுப் பாய்ச்சுவேன்"
"துட்டர் செவி புற்றெனவே
கொட்டால் வெட்டுவேன்."
"பேய்க்காலில் வடம் பூட்டி
ஏர்க்கால் சேர்ப்பேன்"

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்