முகப்புதொடக்கம்
முன்னுரை 25

"தீத்தீயென் றுழக் கோலால்"
"சாத்துவே னாண்டே."

என்று பள்ளன் கூறுவதில் வீரப் பெருமிதங் காண்க.

"உத்தர பாகமான
செஞ்சிக்கும் கூடலுக்கும்"

என்று வரும் பாடல்களில் பள்ளியர்கள் பெருமிதம் கூறுதல் காண்க.

3. அச்சம்

குட்டையிற் கிடக்கும் பள்ளன் இளையபள்ளியை நோக்கி அச்சத்துடன் கூறுகிறான்:

“முடுகவா ரகசிய முண்டு--குண்டுணிக் காரி
   மூத்தபள்ளி பார்க்க வருவாள்
நடுவே தெய்வஞ் சோதிச் சுதையோ--பண்ணை
   நயினார்க்குஞ் செவிகண்ணாச்சே
கடுகநீ போய்விடு சும்மா--சகதியிலே
   கல்லெறிந்த கதையாக் காதே
வடுவந்தால் மறைக்கப்போமோ வருவதெல்லாம்
   வந்துதீரும் மருதூர்ப் பள்ளி”

என்று அஞ்சிக் கூறுகிறான். மேலும் மூத்த பள்ளியிடம்,

“பக்குவஞ் சொல்ல நீதியோ நானிந்தப்
 பாடுபட்டும் இனியறி யேனோ”

என்று அச்சத்தால் இரங்கிக் கூறுகின்றான்.

4. இழிப்பு

“முட்டிக்காற் பண்ணை யாண்டே
 நடுக்கேளாரோ--ஆந்தை
 மூக்கு மூஞ்சிப் பண்ணை யாண்டே
 ............மட்டிவாய்ப் பண்ணை யாண்டே
 ............கருமந்திமுகப் பண்ணை யாண்டே
 ............சட்டித்தலைப் பண்ணை யாண்டே
 ............சால்வயிற்றுப் பண்ணை யாண்டே”

என்றும்,

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்