முகப்புதொடக்கம்
முன்னுரை33

"மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்
வைகலுந் தேய்வது வண்ணமார் சாந்தம்
ஐவரைச் சயித்தோன் அதிவீர னாமென்
றின்னணஞ் சின்மொழி என்றதற் கிலக்கம்
எண்ணள வன்றவ் விறும்பூ தியம்ப
அக்கவி வாணன் அச்சுதன் அருளே
தக்கவோர் உருவந் தான்கொடு பாரிற்
கவிவலோர் உளமெலாங் களிதுளும் பிடநற்
பாடபே தத்தால் பாங்கிலா தவைகளை
நாடியா வருக்கும் நற்பொருள் தோன்றப்
புதுக்கினன் இந்நூல் புகன்மதி மாந்தர்
முதுக்கவி வலராய் முழங்கி வாழ்குவரே,"

இப் பாட்டில், ‘ஐவரைச் சயித்தோன் அதிவீரனாம்’ என்று குறிப்பிடும் அடி இந் நூலில் வரும்,

“தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம்”

என்பதைக் குறிப்பிடுகின்றது. “தனிப்ப”--ஐம்புலனையும் வென்று வெற்றி வீரனாகத் தனித்திருப்ப.

"அக்கூடல் மாநகர்வாழ் சொக்கலிங்கப்
     பெருமானும் அரிவை தன்பால்
மிக்கூடல் நீக்கிடநள் ளிரவெல்லாம்
     பயில்வீதி விடங்கக் கோனும்
இக்கூடற் புதகார னைக்காத
     லாயளிக்கும் இறைவன் றானும்
முக்கூடற் பள்ளினிசை யைக்கேட்கும்
     அன்பரென்றால் மொழியற் பாற்றோ."

இப் பாடல்களினால் தமிழ் மக்கள் இந் நூலைப் படித்து மகிழ்ந்த வகை புலனாகின்றது.

தன்னொப்பது பிறிதொன்று இன்றித் தானேயான இந்த அருமைத் திருநூல் தெளிவான உரையுடன் வெளிவருகின்றது. பாடத்தின் வேறுபாடுகள் ஒவ்வொரு பாட்டின் உரையின் அடியிலும் குறிப்பிடப் பட்டுள்ளன. விரிவஞ்சி மிகுந்த பாடச் சிதைவுகள் காட்டப் பெறவில்லை. கற்போருக்குத் தெவிட்டாத பேரின்பந் தரவல்ல இந்த ஐந்திணை முத்தமிழ் நாடக நன்னூ

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்