முகப்புதொடக்கம்
34 முக்கூடற் பள்ளு

லுக்கு உரைஎழுதும் வாய்ப்பு வழங்கிக் காத்த செம்பொருளினை வணங்கி வாழ்த்துகின்றேன்.

தமிழ்த் தாய் அரியணை ஏறி ஆட்சி செலுத்தும் நன்னிலை பெற்ற இந் நாளில் இந் நூல் வெளிவருவது மிகவுஞ் சிறந்தது. பத்து ஆண்டுக் காலமாகத் --“தமிழ் வெல்க” என்று முழக்கியும் தமிழ் ஆட்சிமொழியாக வேண்டுமென்று எழுதியும் பேசியும் சட்டசபைகளில் எடுத்துக்கூறி விளக்கியும் தமிழை ஆட்சி மொழியாக்கி வெற்றி பெற்ற விருதைப் பெருந்தகை, உயர்திரு செந்தமிழ்ப் புரவலர், (வி. வி. ஆர்.) வே. வ. இராமசாமி (எம். எல். சி.) யவர்களுக்கு நன்றி கூறும் கடப்பாடுடையோம். இந் நூல் எழுதும்போது என்னை ஊக்குவித்தும், திருக்குறட்பாக்களிற் பலவற்றிற்குத் தாமே தம்முதிர்ந்த அனுபவத்தால் நுண்பொருள் நலங்கண்டு சுவைத்து இன்புற்றுக் கூறிக் களிகூரச் செய்தும், தமிழையும் தமிழ்ப்புலவர்களையும் புரந்து போற்றும் உயர்திரு, ‘வி. வி. ஆர்’ அவர்கள் என்றும் தமிழர்களின் உள்ளத்தால் பாராட்டுவதற்கு உரியவர்கள். அவர்களுக்கு யான் எழுமை எழுபிறப்பும் நன்றி செலுத்தும் கடமையுள்ளவன்.

தூய தமிழ் வாழ அரும்பணி யாற்றுஞ் சான்றோராகிய உயர்திரு. வ. சுப்பையாபிள்ளையவர்கள் இரவும் பகலும் தமிழின் வளர்ச்சியைக் கருதியே உழைக்கும் பெரியார். அவர்களின் கடிதங்களே தனியான சிறப்பு வாய்ந்தவை. புலவர்களின் உள்ளத்தையும் கவரும். அவர்கள் இந் நூல் எழுதும் பணியினை எனக்குத் தந்து அச்சாக்கி வெளியிட்டார்கள். அவர்களுக்கு என் நன்றி உரியது.

இந் நூலுக்கு முன்பு உழைத்த பெரியார், பேட்டை உயர்திரு. மேத்தர் முகைதீன், உயர்திரு. தியாகராசக் கவிராயர், உயர்திரு மு. அ. ஆகிய இவர்களுக்குத் தமிழ் உலகமே நன்றி பாராட்டுதற்குரியது. எனது நன்றி சிறப்பாக உரியது.

வாழ்க தமிழ்! மலர்க தமிழகம்!!

ந. சேதுரகுநாதன்
தமிழ் விரிவுரையாளர்.
செ. நா. கல்லூரி, விருதுநகர்

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்