திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ்
பின்னர், சபையிலிருந்த முக்காணிகளும் பிறரும் பிள்ளைத் தமிழ்
நூலில்
சொற்சுவை, பொருட்சுவை, பற்பல சந்தச்சுவை, கற்பனை அலங்காரம்
முதலிய பல நலமும் பத்திப்
பெருக்குங் கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்
நிரம்பியுள்ளன வென்பதையுணர்ந்திருந்தும், பகழிக்
கூத்தருக்குச் செய்ய
வேண்டிய மரியாதையொன்றேனும் செய்யாமற் பராமுகமாயிருந்து விட்டனர்.
அங்ஙனமிருத்தற்குக்
காரணம் இவர் வைணவராயிருந்ததென்று சிலர்
கூறுவர்; அது நிற்க. பகழிக் கூத்தர் செய்யும் சிறப்பை
எதிர்நோக்காது
தமக்கு வயிற்றுநோயைத் தீர்த்த ஞானபண்டிதராகிய குமாரக் கடவுள்
திருவருளையேபொருளாகக்
கொண்டு தமதிருப்பிடஞ் சென்று நித்திய
கன்மானுட்டானஞ்செய்து பேரின்பப் பெருவாழ்விலழுந்தித்
துயில்
செய்வாராயினர்.
அப்போது
கலியுக வரதாகிய குமாரக் கடவுள் பகழிக் கூத்தரது
மெய்யன்பையும், தமிழால் தம்மைப்
பாடுவார்க்குத் தாம் செய்யுந்
திருவருளையும் பிறருக்கறிவிக்கும் பொருட்டுத் தமது திருமார்பில்
சிறப்பழகாகச் சாத்தப் பெற்றிருந்த விலையுயர்ந்த மாணிக்கப் பதக்கத்தைக்
கொண்டு வந்து நித்திரை
செய்து கொண்டிருந்த பகழிக் கூத்தரது
மார்பிலணிந்து விட்டுச் சென்றனர். மறுநாள், திருவனந்தற்
பூசை செய்யவந்த
பெரியவர்களுங் கோவிலதிகாரிகளுஞ் சுவாமி மார்பிலிருந்த பதக்கத்தைக்
காணாமல்
மதிமயங்கி, இதைத் திருடிச் சென்றவன்யாவனென்று ஊரெங்குந்
தேடுவாராய், எங்குங் காணாமல் பகழிக்
கூத்தர் மார்பிலிருக்கக் கண்டு இக்
காரியஞ் செய்தவர் உயிர் தொறு மொளித்திருந்த நம்குமாரக்கடவுளேயன்றி
வேறில்லையென்றுமுன்னை நாள்நிகழ்ச்சியாலறிந்து பகழிக்கூத்தனரை
வணங்கி உம்முடைய பெருமையை யறியாதிருந்த
எங்கள் பிழையைப்
பொறுத்துக்கொள்ளல் வேண்டுமென்று வேண்டிப்
|