சிதம்பரம் செல்ல
விரும்பினர். ஆனால் தாம் புலையனானபடியால்
அப்புண்ணியத்
தலத்திற்குச் செல்லல் தமக்குத்
தகாதே என்று அவர் மிகவும் மனம் நொந்து
இரவெல்லாம் உறக்கமின்றி, ‘இருக்கட்டும், நாளைச்
செல்வோம்’ என்றிருப்பார்.
மறுநாளும் தம் குலத்தாழ்வை
நினைத்து மனம் வருந்தி ‘நல்லது, நாளைப்
போவோம்’
என்றிருப்பார். இங்ஙனம் பலநாட்கள் செல்ல ஒவ்வொருநாளும் நந்தனார் ‘நாளைப்
போவோம்’, ‘நாளைப் போவோம்’ என்று
சொல்லிக்கொண்டிருந்தனர். இதனால் அவர்க்கு
‘நாளைப்போவார்’ என்றொரு நாமம் உண்டாயிற்று.
இவ்வாறு நந்தனார் சில நாளிருந்து
பிறகு
ஒருநாள் மனத்துணிவோடு தில்லை சென்றனர். அப்புண்ணியத்தலத்தை
அடைந்த
பிறகும் அவர் தம் பிறப்பை நினைந்து துன்புற்றனர். ‘தில்லையை அடைந்து
விட்டோம்.
இனி நாம் சுவாமியைத் தரிசிப்பது எவ்வாறு’
என்று மனம் புழுங்கினர். அப்பொழுது
சிவபெருமான் கோவில் தீட்சதர்கள் கனவில்
தோன்றி, ‘பறையர் குலத்துதித்த நமது
பக்தன்
நந்தன் என்பான் ஒருவன் தன் பிறப்பை நினைந்து
வருந்திக் கோபுர வாயிலருகே
நிற்கின்றான்.
அவனை நீங்கள் தீயில் முழுகச் செய்து பிறப்பின்
தூசைப் போக்கி, புனித
பிராமணனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கட்டளையிட்டருளினார்.
தீட்சதர்கள்
அங்ஙனமே, கோபுரவாயிலண்டை நின்ற நந்தனாரை
அடைந்து தீக்குழியில்
முழுகியெழுந்தால் அவரை
அந்தணராக ஏற்றுக்கொண்டு கோயிலுனுட் செல்லச்செய்வதாகக்
கூறினார். நந்தனார் அதற்கு மிகவும் மனமகிழ்ச்சியோடு
ஒப்பித் தீக்குழிவெட்டி
அதிற்குளித்தார். மீட்டும் அவர் அதினின்றும்
எழுந்தபோது முப்புரிநூல் முதலிய
பிராமணச்
|