சின்னங்களோடு கூடிய வேதியவடிவாயிருந்தனர்.
அதைக் கண்டாரனைவரும் அதிசயித்து
நிற்க, நந்தனார்
நடராஜர் திருநடனச் சபையை நாடிச் சென்றார்.
மற்றோரும் அவரைப்
பின் தொடர்ந்து சென்றனர். ஆனால் சிறிதுதூரம்
சென்றதும் நந்தனார் அவர்கள் கண்ணுக்கு
மறைந்துவிட்டனர்.
குறிப்பு:- இதுவே
பெரியபுராணத்துள்ள நந்தனார் சரித்திர
வரலாறு. இதனைப்
பாரதியார் தமது நுட்பமதியால் ஏற்றவிடங்களில் சில கூட்டி,
விரித்துக் கூறியுள்ளனர்.
உதாரணமாக, நந்தனார்
தில்லை செல்லத் தம்மை அடிமை கொண்ட அந்தணரிடம்
விடை
கேட்பதும், அவர் பறையர்க்குப் பக்தி யென்ன
சித்தியென்ன வென்று ஏளனஞ்செய்வதும்,
நந்தனார் அதனால் மனந்தளராது அந்தணரை மிகவும் மன்றாடி
வேண்டலும், அப்போது
அந்தணர் ‘நாற்று
நடவுகளை நட்டுவிட்டுத் தில்லைக்குப்போ’
எனலும், அதற்கிசைந்து,
சென்ற நந்தனார் கனவில்
சிவபெருமான் தோன்றி ‘நந்தா வருந்தாதே.
உனக்காக யாம்
நடவு நட்டு விடுகிறேம். அந்தணரிடம்
நடவு நட்டாயிற் றென்று கூறி தில்லை செல்’
என்பதும், நந்தனார் மறுநாட்காலை அந்தணரிடம்
சென்று ‘நடவு நட்டாயிற்று’ என்று கூற
அந்தணர் நந்தனார் கூறியது மெய்யாயிருக்கக்
கூடுமா என்றையுற்று, தமது கழனிகளைச்
சென்று பார்க்கக் கழனிகளிலெல்லாம்
பயிர் விளைந்து முற்றியிருப்பதைக் கண்டு
பேராச்சரியம் கொண்டு நந்தனார் சிறந்த
சிவபக்தராதல்வேண்டுமென்று சிந்தையிற் கருதி
இனி இவர்க்கு நாம் விடைகொடாதிருத்தல்
நன்றன்றென்று நந்தனாரை நோக்கி ‘நந்தா, நீ
உன் மனம் போல் தில்லைமன்று சென்று மன்றாடியைத்தரிசித்து
வா’ என்று
கூறியனுப்புவதும், அவ்வுத்தரவு பெற்று நந்தனார்
தில்லை செல்வதுமாகிய
|