கொடுக்கும், பேதைமையைக் கொடுக்கும்; எல்லாப் பற்றுக்களையும் சேர்க்கும்;
கடவுட்பற்று நீக்கும்; மேன்மேலும் பிறவியுண்டாக்கும்; செருக்கு உண்டாக்கும்,
ஊமையராக்கும்; செவிடராக்கும், குருடராக்கும், இதனால் அறிவுடையோர் விரும்பாது
வெறுப்பர். அவரால் வெறுக்கப்படுவதால் வெறுக்கை என்று செல்வத்திற்குப் பெயர்
வந்தது. சிறியோரே மதிப்பர் இப் பொருட் செல்வத்தை. அருட் செல்வத்தையே அறிஞர்
விரும்புவர். ஆதலால் கண்ணபிரான் திருவருளையே கருதி வாழ்வாம் என்றும்
இடித்துரைத்தார். பல அறிவுரையும் புகன்றார். பிறப் பிறப்புக்களின் இழிவும் மக்கள்
வாழ்வின் பயனும் பலபடியாக வகுத்துரைத்தார். கண்ணன்பாற் சென்று பிறவியையொழித்து
முத்தி தரும்படி வேண்டுவதே சிறந்தது. இழிந்த பொருட் செல்வத்தை வேண்டுவது
நலமன்று" என்று மறுத்துரைத்தான்.
தன் கணவர் சாற்றிய மாற்றமெல்லாம் கேட்டும் உண்மையெனத் தெளிந்தும்
மக்கள்மேல் வைத்த அன்பாற் பின்னும் பின்னும் அவர் பதத்தில் வீழ்ந்து பன்முறை
வேண்டினள்; இனிய மொழி புகன்றனள். கடவுள் நம் புதல்வரைக் காப்பார் எனினும்
நாமும் முயலவேண்டும் அன்றோ. முயன்றாலன்றோ பயன் விளையும்? முயற்சிக்குத்
தானே வந்து இறைவன் பயனளிப்பனோ? முயற்சிக்குத் தக்க பயன் கிடைப்பதை நாம்
கண்ணாரக் காண்கின்றோம். நீங்களும் தவம், தானம் விரதம் புரிவது முயற்சியன்றோ?
செய்யத் தகுவன செய்தாற் செல்வமும் அளிப்பனன்றோ? எல்லாம் இறைவன் பெயலென
எண்ணி உண்ணாதிருக்க இயலுமோ? உணவைக் கையாலெடுத்து வாயில்வைத்துண்
பதும் முயற்சியன்றோ? முயற்சியில் எல்லாம் முடியும் என அறிஞர் கூறுவதும் நீங்கள்
அறிந்ததொன்றே. ஆதலாற் கண்ணபிரானைக் கண்டு நங்குறை நீக்குமாறு கூறிவருவதே
கடமையாகும் என்று மன்றாடினள்.
குசேலர்க்கு மனம் இரங்கியது. கண்ணபிரானைச் சென்று கண்டாற் பிறவிப்
பிணி நீங்கி நற்கதி சார்தற்கு
|