செய்வாள் பாவம்! பெருமூச்சு விட்டு ஒன்று அழும்; கண்பிசைந்து ஒன்று புரண்டு
விழுந்துருண்டு பூமியிற் கிடந்து புலம்பும். இக்கொடுமையை எவ்வாறு பொறுப்பாள்.
ஐயோ என் பசியடங்கவில்லையே என்று புலம்பும் ஒன்று, என் பங்குக் கஞ்சியைச்
சிந்தாமல் வார்க்க வில்லையே நீ என்று பொய் சொல்லும் ஒன்று, உண்ணப்போகுங்
கஞ்சியை இழுத்துப் பறித்துத் தட்டிச் சிந்துவதற்குத் தொடங்கும் ஒன்று, இவ்வாறு
கஞ்சிவார்க்கும்போது ஒவ்வொருநாளும் போரும் புலம்பலுமே யன்றி மகிழ்ச்சியின்றி
வருந்துவது கண்டாள் தாய். பற்றாக் கஞ்சி-பங்குக் கஞ்சி குடிக்கும் பிள்ளைகட்கு
மகி்ழ்ச்சிவிளைப்பது எங்ஙனம் இயலும்!
வருந்து மக்களைக் கரத்தாலணைத்தும் மடியிலிருத்தியும் கண்ணீரைத் துடைத்தும்
முகத்தையும் முதுகையும் தடவியும் வாய் முத்தங் கொடுத்தும் இனிமையாகப் பேசியும்
ஒருவாறு வருத்தம் தணித்து வந்தாள். அடுத்தமனைச் சிறுவன் ஒருவன் "உங்கள்
வீட்டில் என்ன கறி சமைத்தனர்" என்று என்னை வினவினான். அதற்குப் பொருள்
என்ன? கறி என்றால் என்ன சுவையுடையது? அன்னாய்! சொல்" என்று ஒரு குழந்தை
கேட்கும்; ஒரு சிறுவன் உண்ணும் சிற்றுண்டியைக் கண்டு ஒடிவந்து "அவன் உண்ணும்
பலகாரத்தை இப்போழுதே எனக்குச் சமைத்துக்கொடு" என்று கேட்கும் ஒரு குழந்தை;
இவற்றையெல்லாங்கேட்ட சுசீலை ஒன்றும் பேசாதும் இருப்பாள். நாளைக்கு நாளைக்கு
என்று நாட்கடத்தியும் வருவாள். சுசீலையின் பொறுமையை எங்ஙனம் கூறுவது. கற்புடைய
காரிகை யாதலாற் கணவனிடம் இத்துயரங் கூறாதே மறைத்து வந்தாள்.
அளவிறந்த துயரத்தால் வருந்திய அம்மங்கை தன் கணவன் அமயம் அறிந்து
ஒருநாள் உரைக்கத் துணிந்தாள். காம முதல் அறுபகையுங் கடந்து திருமாலடியைத்
திருவுள்ளத்தில் வைத்துப் போற்றும் பெருமையுடையீர்! மனைவி மக்கள் மீதும் பற்றின்றிக்
கடவுட் பற்றுடன் வாழும் கடுந்
|