பிராமணப் பெரியவர் வாக்குப்படிப் பிறந்த அக்குழந்தை என்று
கருதிய ‘ஏட்' தம் மகனுக்கு இராமலிங்கம் என்று பெயரிட்டார்.
ஆனால்
அம்மணியம்மாவோ கருப்பண்ணன் என்றே பெயரிட்டு
அழைத்து வரலானார்.
தாய்
தந்த உபதேசமாவது, "சாமி நீ என்ன வேணுமானாலும் செய்;
ஆனால் பொய் மட்டும் சொல்லாதே! போக்கிரி என்று பேர் எடுக்காதே.
இந்த இரண்டைத் தவிர நீ எது செய்தாலும் பரவாயில்லை" என்பார்கள்.
இந்த உபதேசம் ஒன்றே கவிஞரின் முன்னேற்றத்திற்குக் காரணமாகும்.
‘சித்திரமும் கைப்பழக்கம்' என்பர். கவிஞர்
இராமலிங்கம் சிறுவயதிலிருந்தே
சித்திரம் எழுதும் பழக்கம் உண்டு. ஒரு நாள் கல்லூரி முதல்வர் எலியட்
துரை மகனார் "நாகரிகப் பழக்க வழக்கங்கள்" என்பதைக்
குறித்துக் கட்டுரை
ஆங்கிலத்தில் வரையுமாறு மாணவர்களைப் பணித்தார்.
பின்னர்
கல்லூரி முதல்வர் ஏதோ ஒரு நூலை நாற்காலியில்
சாய்ந்தவாறு
படித்துக் கொண்டிருந்தார். கட்டுரை எழுதி முடித்த இராமலிங்கம்
அவர்
நாற்காலியில் சாய்ந்திருக்கும் உருவத்தை மிக அழகாக வரைந்தார்.
கல்லூரி முதல்வரின் மனத்தை அந்த ஓவியம் கவர்ந்தது. கல்லூரித்
தலைவரான
எலியட் துரை அவர்கள் இராமலிங்கம் கட்டுரை
எழுதும் திறமையையும் ஓவியம்
வரையும் ஆற்றலையும் பாராட்டி பைபிளையும் கட்டுரை
எழுதுவது எப்படி என்ற
ஒரு நூலையும் பரிசாகத் தந்தார்.
பத்தொன்பது
வயதில் மெட்ரிகுலேஷன் வகுப்பில் தேர்ச்சி
பெற்றார்.
பின்னர் பிஷப்ஹீபர் என்ற கல்லூரியில் இண்டர் மீடியட் வகுப்பில்
தேர்ச்சி
பெற்றார். டில்லியில் நடைபெற்ற ஐந்தாம் சார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில்
கலந்து கொண்டு மன்னனது ஓவியத்தைக்
|