கொடுத்து அவரிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றார். திருச்சி காங்கிரசு
கமிட்டிச் செயலாளராகப் பணியாற்றினார். மகாகவி பாரதியாரைச் 
சந்தித்துப் பாடல் ஒன்றைப் பாடிக் காட்டிப் புலவன் எனப் பாராட்டப் பெற்றார்.

மகாகவி, காந்தியின் மிதவாதக் கொள்கைக்கு ஆதரவளித்தார். 
1921 முதல் 1930 வரை நாமக்கல் காங்கிரசுக் கட்சியின் வட்டச் செயலாளராகப்
பணியாற்றினார். 1924இல் முதல் மனைவி முத்தம்மாள் காலமானார். 
இரண்டாம் மனைவி சௌந்தரம்மாளைத் திருமணம் செய்து கொண்டு 
நல்லறம் நடத்தி வந்தார்.

ஒரு சமயம் காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத்
தொடங்கினார். அதுபோது தேசபக்தியை வளர்க்கத் தகுந்தவாறு 
நாமக்கல் கவிஞர் பெருமான் பாடிக்கொடுத்த பாடல்களை மிகவும் 
உற்சாகத்துடன் பாடிச் சென்றனர். அப்பாடல்,

 
 
கத்தியின்றி ரத்தம் இன்றி
      யுத்தம் ஒன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
      நம்பும் யாரும் சேருவீர்.  
இந்தப் பாடல் நாமக்கல் கவிஞரைத் தேசியக் கவிஞர் என்ற சிறப்பான
இடத்தைப் பெறச் செய்தது.
 
தமிழன் என்றோர் இனமுண்டு
       தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடை வழியாகும்;
        அன்பே அவனுடை மொழியாகும்;
தமிழன் என்று சொல்லடா!
         தலைநிமிர்ந்து நில்லடா!