1953ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி முதல் கூட்டத்தில் நாமக்கல்
கவிஞரை நேருவுக்கு அறிமுகப்படுத்தியபோது டாக்டர் எஸ்.
இராதாகிருட்டிணன்
கூறியதாவது: "நாமக்கல் கவிஞர் ஓர் அரிய கலைஞர்; தலைசிறந்த
தேசபக்தர்;
தேசத்துக்காகத் தியாகம் பல செய்தவர்; சிறைவாசம் புரிந்தவர்;
ஒழுக்கத்தில்
உயர்ந்தவர்; நண்பர்களின் அன்பைக் கவர்ந்தவர்; கள்ளங்கபடம்
அற்ற
உள்ளத்தினர்; புகழுக்கும் பொருளுக்கும் ஆசைப்படாதவர்;
ஆடம்பரத்தை
அடியோடு வெறுத்தவர்; "ஆடு ராட்டே சுழன்று ஆடு ராட்டே!" என்று
பாடித் தமிழ் நாட்டையே சுழன்று ஆடச் செய்தவர்"
எனக் கூறினார்.
திரைப்பட
உலகில் இவரால் பாராட்டும் வாழ்த்தும் பெற்றோர் இருவர்.
ஒருவர் எம்.ஜி.ஆர்; மற்றொருவர் என்.டி. ராமாராவ். மலைக்கள்ளன்
என்ற
படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகி பானுமதியோடு நடித்தார். அதேபோன்று
என்.டி. ராமாராவ் அக்கிராமுடு என்ற படத்தில் கதாநாயகி பானுமதியோடு
நடித்தார். இவர்கள் இருவருமே முதல் அமைச்சராக இருந்து நாட்டை
ஆண்டு
வந்ததை நாம் கண்கூடாகக் கண்டுள்ளோம்.
சுமார் 85 ஆண்டுகள் நிறைவான வாழ்வு வாழ்ந்த கவிஞர்
அவர்கள்
1972ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22ஆம் நாள் இரவு 3 மணிக்குத்
திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களில் அவருடைய
ஆன்மா பிரிந்தது.
மனிதப்
பிறவி எடுத்ததன் பயனைக் குறைவறப் பெற்றவர்
நாமக்கல்
கவிஞராவார். தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், காங்கிரசு புலவர்,
அரசவைக் கவிஞர் என்றெல்லாம் மக்களால் பாராட்டப்பட்டவர்;
கள்ளங்கபடமற்றவர்; சிறந்த சிந்தனையாளர்; அன்னார் பாடல்களைப்
படித்து இன்புறுவோமாக.
|