சான்றோர் உரை:
மூதறிஞர்
டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் வழங்கிய
வாழ்த்துரை:
ஓசை நயமும் கற்பனை வளமும் இயல்பாக அமைந்த கவிஞர்
தமிழ் ஒளி. அவர்தம் பிரிவு நினைப்பவர் நெஞ்சத்தை வருந்துவதாக
உள்ளது.
‘புத்தர் பிறந்தார்’ என்ற அருமையான காவியம் முடிக்கப்படாமலே
குறையாக
நின்றுவிட்டது. தமிழிலக்கியத்தின் குறையாகவே
ஆகிவிட்டது.
கள்ளம்
இல்லாத நெஞ்சம், உறுதிமிக்க உள்ளம் - இந்தக்
கவிஞரின்
சிறப்பியல்பு. ‘யாத்திரை’ என்ற பாடலைப்
படிக்கும்போது, அவருடைய கலை
வாழ்வைப் பற்றியே உணர்கிறோம்.
|
“கள்ளம் இருந்தக்கால்
காணும்வழி அச்சுறுத்தும்
உள்ளம் இசைந்தாலோ
உறுதி தளராதாம்
போகும்வழி தூரமென்று
பூமிதனில் அஞ்சிடிலோ
சாகும்வரை நீந்துமிந்த
சமுத்திரமும் தூரமன்றோ?
உழைக்காமல் யாதுபயன்,
ஓய்ந்தார்க்கு வெற்றியுண்டோ?
அழைக்கின்றாள் கொல்லிமலை
ஆரணங்கு செல்லுகின்றேன்!” |
என்ற பகுதிகள் அவருடைய வாழ்வையும் முடிவையும் எடுத்துரைப்பனவாக உள்ளன. அஞ்சாமல் வாழ்க்கைக் கடலில் நீந்தினார்; ஓயாமல் உழைத்தார்; கவிதையணங்கின் இறுதியழைப்பையும் ஏற்றுச் சென்றுவிட்டார். அவருடைய வாழ்க்கை ‘வழிப் பயணம்’ நைந்த வழிப் பயணமாய், ஒற்றை வழிப் பயணமாய் முடிந்தது. |