மனோன்மணீயம்

234

III

புறநானூறு

பக்கம் வரி
36 12

'சூட்டுடைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தஅவ்

வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின்'

"தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்

கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்

ஏந்தெழில் மழைக்கண் இன்னகை மகளிர்

புன்மூசு கவலைய முன்மிடை வேலிப்

பஞ்சி முன்றிற் சிற்றில் ஆங்கண்

பீரை நாறிய சுரையிவர் மருங்கின்

ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்

உப்பொ யொழுகை எண்ணுப மாதோ"

(புறநானூறு - 116)