தமிழ்க்காதலை ஏழு இயல்களில் ஆய்ந்துள்ளார். 2381-சங்கப் பாடல்களில்
1862. பாடல்கள் அகத்திணை சார்ந்தவை; 378 அகக் கவிஞர்களால்
பாடப்பெற்றவை, என்று கூறி முதன்முதல் ஒருசேர இவை குறித்து
ஆய்ந்தவர். எட்டுத்தொகையுள் ஆறுதொகைகளில் 1858. அகப்பாடல்கள்;
பத்துப்பாட்டுகள்
4 என அகப்பாடல்கள் 1862-ஐ அசைவு செய்து
வகைப்படுத்தி ஆய்ந்தவர்.
குறுந்தொகைப்பாக்கள் 4 முதல் 8 அடிகள் வரை உடையவை;
நற்றிணைப்பாக்கள் 9 முதல் 12 அடிகளும் உடையவை; நெடுந்தொகை
என்னும் அகநானூறு 13 முதல் 31 அடிகள் வரை அடிநீட்சி கொண்டவை.
அடிக்கணக்கு நோக்கில் அகக்கவிஞர்கள் இத்தொகைப் பாடல்களைப்
பாடவில்லை. தொகுத்தோரின் தொகுப்பு நெறிக்கணக்கு இது என்று கூறி
முதல்-கரு-உரிபொருள்கள் எனும் மூன்றின் பொருளாட்சி, பாட்டுக்குள்
இடம்பெற்றுள்ள விதம் குறித்தே குறுந்தொகை என்றும் நன்றிணை என்றும்,
நெடுந்தொகை என்றும் தொகுக்கப் பெற்றன என்று தம் நுழைபுலத்தால்
முதன்முதல் தெளிவுபடுத்துவார் மாணிக்கனார். வடலூராரின் சன்மார்க்கத்தில்
ஜோதிதரிசனர் போல, அகஇலக்கியங்களில் இங்ஙனம் அவர் முதல்முதல்
காட்டிய ஆய்வு வெளிச்சங்கள் பலப்பல. தமிழ்க்காதல் முழுதும் இத்தகைய
அகத்திணை வெளிச்சங்கள்! மிகச்சிறந்த அகத்திணைப் புலப்பாட்டுத்திற
ஆய்வாக இந்நூல் திகழ்கிறது. ஒவ்வொரு தொகையின் அகப்பாட்டு நேர்த்தி,
மற்றும் அதனதன் திறன்களைத் தனித்தனியாக ஆய்ந்துள்ளார்.
ஐங்குறுநூற்றுக்கே உரிய நேர்த்தி. கலித்தொகைக்கே உரியநேர்த்தி (ஏழு
அகத்திணைப் பாடல்களுக்கும் இலக்கியம்) குறுந்தொகைக்கு நெடுந்தொகைக்கு
என்று ஒவ்வொரு ‘தொகை வண்ணமும் கண்டுள்ளார்!
தமிழ்க் காதல் நூலின் சிறப்புகள்:
<> சங்க இலக்கியத்தின் 1862 அகப்பாடல்களையும் ஒருசேர ஆய்ந்த
முழுநோக்குடையது.
<> சங்க அகப்பாடல்களில் களவுப்பாடல்கள் 882, கற்புப்பாடல்கள்
966. களவு மட்டும் பாடியோர் 145 புலவர்; கற்பினைப் பாடியோர் 233 பேர்.
ஒருதுறைக்கு இத்துணைப் பாடல்கள்; ஒவ்வொரு புலவரும் பாடியவை
இவ்வளவின என்று எண்ணியும் பகுத்தும், ஆய்ந்து, கருத்துரைப்பது.
<> அகத்திணை ஆராய்ச்சி, அகத்திணைப் பாகுபாடு, அகத்திணைத்
தோற்றம், அகத்திணைக் குறிக்கோள், அகத்திணைப் பாட்டு, அகத்திணைப்
புலவர்கள், அகத்திணைக் கல்வி என்று ஏழு இயல்களில் காமஞ்சான்ற
இலக்கியங்களை ஆராய்வது.
<> இலக்கியம்-இலக்கணம் என்று இருநெறிகளாலும் ஆயும்
சிறப்புடையது.
<> அகத்திணையின் பாடுபொருள் காதல்; இது உள்ளத்தொடு
இயைந்தது. எனவே உளவியல் நோக்கில் ஆயும் பெற்றியது.
|