புணர்ச்சி யாகவே எண்ணவேண்டும். இப்புணர்ச்சிகளுள் நிலை மொழிகளில்
உயிர் ஈறுகள் நின்றும், மெய்யெழுத்துக்களில் ய, ர, ழ ஈறுகளாய் நின்றும்
வருமொழி முதலில் க, ச, த, ப தொடரும் புணர்ச்சிகளை மட்டுமே இந்நூல்
எடுத்துக் காட்டும், வல்லெழுத்துக்கள் மிகுதலும் மிகாமையும் இங்கேதான்
நிகழ்கின்றன; நிலைமொழி வருமொழி ஆகிய இரண்டும் தமிழ்ச்சொற்களாய்
இருக்கவேண்டும்.
நன்றி வரிகள்
- இந்நூலினை வெளியிட அனுமதித்த
அ.வ.அ. கல்லூரியின் முதல்வர்
ஆ. இராஜ்மோகன், எம்.எஸ்ஸி., எம்,பில்., அவர்கட்கும்
கல்லூரியின் ஆட்சிக்குழுச் செயலர்
ஏ.சோ. கணபதி, பி,இ,, அவர்கட்கும்
- அ.வ.அ. கல்லூரியில் என்னுடன் பணியாற்றும்
அச்சுப்படி திருத்த உதவிய
பேரா. சு. தமிழ்வேலு, எம்.ஏ.,எம்.பில்., அவர்கட்கும்
- எண்ணியவண்ணம் அச்சாக்க உதவிய சிதம்பரம்
சபாநாயகம் அச்சகத்தார்க்கும்
- வெளியிட முன்வந்த திங்கள் பதிப்பகத்தார்க்கும்
காணிக்கை மொழிகள்
என் பேராசிரியர் பெருந்தகை
முனைவர் வ.சுப. மாணிக்கனார்க்கும்
என் ஆய்விற்கு நெறியாளராகத் தோன்றிய
செஞ்சொற்கொண்டல் முனைவர்
சொ. சிங்காரவேலனார்க்கும்
எனக்குக் கல்லூரியில் பணிகிட்டத் துணைநின்ற
மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர்க்கும்
|