பக்கம் எண்: - 31 -

ஒன்று - தொல்காப்பியம் - கிடைத்துள்ளது. அவற்றில் காணும் மரபுகள் சங்க இலக்கிய காலத்துக்குப் பிறகும் பல நூற்றாண்டுகள் வரையில் புலவர்களின் காதல் பாட்டுகளில் கையாளப்பட்டன. அந்த மரபுகள் வருமாறு:-

திணை முதல்பொருள் கருப்பொருள் உரிப்பொருள்
குறிஞ்சி மலை புலி யானை கிளி காதலர்களின்
  ஐப்பசி மயில் வேங்கை கூடல்.
  கார்த்திகை சந்தன மரம் (பெரும்பாலும்
  முதலியன காந்தள் பூ திருமணத்துக்கு
  நள்ளிரவு வேட்டையாடல் முந்திய களவு
      வாழ்க்கை)
முல்லை காடு மான் முயல் பசு (போர்க் கடமைக்
  ஆவணி கொன்றை குருந்து காகக்) காதலன்
  புரட்டாசி முல்லைக்கொடி பிரிந்த போது,
  மாலை   காதலி அவன்
      வரவை எதிர்
      நோக்கியிருத்தல்.
மருதம் வயல் எருமை நீர்நாய் பரத்தையோடு
  வைகறை மருதம் காஞ்சி காதலன் உறவு
    தாமரை கொண்டமையால்
    உழவு காதலி ஊடல்.
நெய்தல் கடல்சார்ந்த சுறா காதலன்பிரிவால்
  பகுதி புன்னை ஏங்குதல்
  சாயுங்காலம் நெய்தல் தாழை மீன்பிடித்தல்
    உப்பு விளைத்தல்  
பாலை மலையும் காடும் வாடிய புலி யானை பொருள் காரண
  வளமிழந்து பருந்து மாகக் காதலன்
  திரிந்தவை கள்ளி இருப்பை பிரிந்தபோது
  வேனில் மரா காதலி
  நண்பகல் கொள்ளையிடல் வருந்துதல்

ஒரு காதல் நிகழ்ச்சியைக் கற்பனை செய்து பாடும்போது, இவ்வாறு அதற்கு உரிய நிலம் பொழுது பறவை விலங்கு மரம் பூ முதலிய இயற்கைப் பொருள்கள் ஆகியவற்றையும் அமைத்துப் பாடும் மரபு நெடுங்காலமாக இருந்துவந்தது. ஊர்ஊராக மக்கள் எழுதாமலே பாடிவந்த நாட்டுப் பாடல்களிலேயே அந்த மரபு இருந்துவந்தமையால், புலவர்கள் அந்த மரபுகளை அவ்வாறே கையாண்டு இலக்கியம் படைத்தனர். அதனால் கணவனும் மனைவியும் ஊடல் கொண்டு பிணங்குவதைப் பாட