புலவர்களின் பெயர்
தெரியவில்லை. கபிலர் என்ற புலவர் ஒருவர் 235 பாட்டுகள் பாடியுள்ளார். வேறு புலவர்
நால்வர் நூற்றுக்கு மேற்பட்ட பாட்டுகள் (ஒவ்வொருவரும்) பாடியுள்ளனர். சிற்சில பாட்டுகளும்
ஒவ்வொரு பாட்டும் பாடியவர்கள் மிகப் பலர்.
பத்துப்பாட்டில் உள்ள பாட்டுகள் மிகப் பல அடிகள் உடையவை.
அவற்றுள் பெரியது மதுரைக்காஞ்சி; 782 அடிகளால் ஆகியது. அந்தப் பத்துப் பாட்டுகளுள்
நான்கு அகப்பொருள் பற்றியவை; ஆறு புறப்பொருள் பற்றியவை. எல்லாம் நீண்ட வருணனைகள்
உடையவை.
சங்க இலக்கியத்துள் அமைந்த பாட்டுகள் பெரும்பாலும்
அகவல் என்னும் ஒருவகையான எளிய செய்யுளால் அமைந்தவை. கலித்தொகையும் பரிபாடலும்
கலி பரிபாட்டு என்னும் ஓசைநயம் நிரம்பிய செய்யுள் வகைகளால் அமைந்தவை.
பாடிய புலவர்களுள் சிலர் நகரங்களைச் சார்ந்தவர்கள்;
பலர் சிற்றூர்களைச் சார்ந்தவர்கள். கற்பிக்கும் ஆசிரியர், பொன் வாணிகர், ஆடை
வாணிகர், மருத்துவர், தச்சர், சோதிடர், பொற்கொல்லர், கொல்லர், சேனைத் தலைவர்,
அமைச்சர், பாணர், கூத்தர் முதலாகப் பல்வேறு தொழில் செய்து வாழ்ந்தவர்கள் புலவர்களாய்ப்
பாடியுள்ளனர். பெண்பாற் புலவர் முப்பதின்மர் பெயர்கள் தெரியவருகின்றன. அரசர்களாக,
அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருந்து புலமை பெற்றுப் பாடியவர்கள் முப்பத்தொருவர்.
அவர்களுள் கோப்பொருஞ்சோழன், கிள்ளிவளவன், சோழன் நலங்கிள்ளி, பாண்டியன் நெடுஞ்செழியன்
ஆகியோர் புகழ்பெற்ற அரசர்கள். அவர்கள் தமிழிலக்கியத்தில் இடம்பெறும் அளவிற்குப்
புலமைச் செல்வமும் பெற்றிருந்தமை போற்றத்தக்கது. புலமை இல்லாத அரசர்களும், புலவர்களால்
பாடப் பெறுவதை ஒரு பெரிய பேறாகக் கருதினார்கள். புலவர்களின் புகழ் பெற்றவர்களுக்கு
மறுமையில் தேவருலக இன்பம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது.
புலவர் - அரசர் உறவு
தமிழ்நாடு,
சேரர் சோழர் பாண்டியர் என்ற மூன்று வேந்தர்களின் ஆட்சியிலும், அவர்களுக்கு உட்பட்ட
பல குறுநில மன்னர்கள் அல்லது சிற்றரசர்களின் ஆட்சியிலும் இருந்தது. அந்த மூன்று வேந்தர்களைப்பற்றியும்
அவர்களின் நாடுகளைப்பற்றியும் குறிப்புகள் வடமொழி மகாபாரதத்திலும் வால்மீகி ராமாயணத்திலும்
உள்ளன. மூவேந்தர்களின் தலைநகரங்களான வஞ்சியும் உறையூரும் மதுரையும் கலைக்கூடங்களாக
விளங்கின. மூவேந்தர்களின் அரசியல் தலைமையும் எல்லாப் பகுதியாராலும் போற்றி
|