பக்கம் எண்: - 48 -

பழைய நண்பர்களின் தொடர்புபோன்ற ஒருவகை உறவை அந்தப் பாட்டுகளின் மொழியிலும் நடையிலும் உணர முடிகின்றது.

உயர்ந்த உண்மைகள்

வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறாமல், வாழ்க்கையின் பொதுவான உண்மைகளை எடுத்துரைக்கும் பாட்டுகளும் சுவை குன்றாமல் இன்றும் கற்றுப் போற்றத் தக்கவைகளாக உள்ளன. எடுத்துக்காட்டாக, பாண்டியர் குடும்பத்தைச் சார்ந்த இளம்பெருவழுதி என்பவர் பாடிய பாட்டு ஒன்றைக் காணலாம் :

உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் பழிஎனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

இல்லாமல், பிறர் நன்மையே நாடி உழைக்கும் சான்றோர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இருக்கிறது என்று அவர்களின் உயர்ந்த பண்புகளை எடுத்துரைப்பது இந்தப் பாட்டு. தேவ அமிழ்தம் கிடைத்தாலும் இனியது என்று அதைத் தனியே உண்ண மாட்டார்களாம் அத்தகைய சான்றோர். யாரிடத்தும் வெறுப்புக் கொள்ளமாட்டார்கள். பிறர் அஞ்சும் துன்பங்களுக்காகத் தாம் அஞ்சி உறக்கமும் இல்லாமல் வருந்துவார்கள். புகழ் என்றால் அதைப் பெறுவதற்காகத் தம் உயிரையும் கொடுப்பார்கள். பழி வருவதானால், உலகமுழுதும் பெறுவதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சோர்வு அடையமாட்டார்கள். அத்தகைய சிறப்புகள் உடைய, தன்னலம் அற்ற, சான்றோர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இருக்கிறது என்கிறார் புலவர். ஒவ்வொரு சொல்லிலும் தொடரிலும் ஆழ்ந்த கருத்தின் தெளிவும் திட்பமும் அமைய உயர்ந்த உண்மையை விளக்கியுள்ளார்.

பூங்குன்றனார் என்ற புலவர் ஒருவர் அதே முறையில் வேறு உண்மையைத் தெளிவாக்கியுள்ளார் :

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல