பக்கம் எண்: - 56 -

இடம் என்று மற்றக் கலைஞர் சொன்னதைக் கேட்ட பிறகே அந்த வள்ளலிடம் செல்கிறார்கள். அந்த வள்ளலுடைய முன்னோரின் பெருமையையும நாட்டின் இயற்கை வளத்தையும் பாடுகிறார்கள். அந்த வள்ளலும் அவர்களுடைய வறுமையை உணர்ந்து மான உணர்ச்சியை மதித்துத் தக்கபடி நடந்துகொள்கிறான்.

பெரும்பாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படையும் பாணர் குடும்பத்தைப்பற்றி விளக்குவதாகும். அது 500 அடிகள் உடையது. காஞ்சியில் ஆண்டு வந்த இளந்திரையன் என்னும் அரசனுடைய ஆட்சிச் சிறப்பைப் பற்றியும், அவனுடைய நாட்டின் இயல்புபற்றியும், கடற்கரைப் பட்டினம்பற்றியும், அங்கு இருந்த கலங்கரை விளக்கம்பற்றியும், மலைவளம்பற்றியும் இந்தப் பட்டால் அறியலாம். அரசன் கலைஞர்களுக்கு உணவு அளிக்கும்போது, அன்பு நிறைந்தவனாய், விருப்பம் மிகுந்த முகம் உடையவனாய், குழந்தை பார்ப்பதுபோல் ஆசையுடன் பார்ப்பானாம்; தான் நின்றவாறே உபசரிப்புச் செய்வானாம்.

மலைபடுகடாம்

மலைபடுகடாம் என்பது கூத்தர் குடும்பத்தைப்பற்றிய ஆற்றுப்படை; 583 அடிகள் உடையது. கூத்தராற்றுப்படை என்றும் இது கூறப்படும். ஒரு மலையில் பிறக்கும் பலவகை ஓசைகள் இதில் விளக்கப்படுகின்றன. அந்த மலை ஓர் யானையாக உருவகம் செய்யப்பட்டு, மலையில் எதிரொலிக்கும் பலவகை ஓசைகளும் அந்த யானையின் மதம் போன்றவை என்று விளக்கப்படுவதால், மலைபடுகடாம் என்ற அந்தப் பெயர் கற்பனை நயம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நூலில் கூத்தருடைய இசைக்கருவிகளும் கலைவாழ்க்கையும் விளக்கப்படுகின்றன.

முல்லைப்பாட்டு

பத்துப்பாட்டில் உள்ள அகப்பாட்டுகள் (காதல்பற்றிய பாட்டுகளுள்) சிறந்தவை முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் ஆகும். இவற்றில் எந்த அரசனையும் வள்ளலையும் சிறப்பிக்கும் நோக்கம் இல்லை. குறிப்பிட்ட எந்த நாடும் நகரமும் சிறப்பிக்கப்படவில்லை. அகப்பொருள் ஆகிய காதல் ஒன்றை விளக்குவதே இவற்றின் நோக்கம். முல்லைப்பாட்டு 103 அடிகள் உடையது. காதலன் போர்க்கடமையை மேற்கொண்டு பிரிந்து சென்றபோது, அவன் வெற்றியோடு திரும்பி வருதலை எதிர்பார்த்துக் காதலி தன் வீட்டில் பொறுமையுடன் பிரிந்திருத்தலே முல்லைத்திணை என்று கூறப்படும். பிரிந்த தலைவன் மழைக்காலத்துக்குள் போரை முடித்துத் திரும்ப வேண்டும்; மழைக் காலத்தில் போர்க்களத்தில் வீரர்கள் இருப்பதால், இரு நாடுகளிலும்