பக்கம் எண்: - 71 -

நாட்டை ஆளும் தலைவனுக்காக அவர் கூறியுள்ள கருத்துகளும் அறிவுரைகளும், தலைவனுக்குமட்டும் அல்லாமல் குடிமக்கள் எல்லோர்க்கும் பொருந்துவனவாக உள்ளன. இதுவும் ஒரு சிறப்பே ஆகும். கல்வி, கேள்வி, அறிவுடைமை, காலம் அறிதல், இடம் அறிதல், வலியறிதல், ஊக்கம், சோம்பலில்லாமை, முயற்சி, துன்பத்தில் கலங்காமை, சொல்வன்மை, செயலில் தூய்மை, செயலில் உறுதி, செயல் செய்து முடிக்கும் திறமை, பொருள் சேர்த்தல், நட்பு, பகை, பெரியோரைப் போற்றல், விலைமகளிடம் சேராமை, கள் குடித்தலின் தீமை, சூதாட்டத்தின் தீங்கு, மருந்து, மானம், நற்பண்பு, உழவின் சிறப்பு, வறுமையின் கொடுமை முதலிய அதிகாரங்களின் கருத்துகள் அவ்வாறு குடிமக்கள் எல்லோர்க்கும் பொதுவாகப் பொருந்தும் வகையில் இருப்பது காணலாம். குடிமக்களுள் ஒவ்வொருவரும் வீட்டையோ வாணிக நிலையத்தையோ தொழில் அமைப்பையோ ஆளவேண்டிய கடமை இருப்பதால், அந்த அளவிற்கு அவரும் ஆட்சித் தலைவராக அமைகிறார். ஆகையால் நாட்டுத் தலைவர்க்குக் கூறப்படும் அறிவுரைகள் அவர்க்கும் பொருந்தி அமைகின்றன.

வாழ்க்கைக்குப் பொருள் கட்டாயமாகத் தேவை என்னும் கருத்தைத் திருக்குறள் அழகாக எடுத்துரைக்கிறது. “பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லாதவர்க்கு அந்த உலகம் இல்லாதது போல” என்கிறார். இப்படிச் சில குறட்பாக்களில், ஓர் உண்மையை விளக்குமிடத்தில் அதற்கு உவமையாக மற்றோர் அரிய கருத்தையும் விளங்கச் செய்கிறார். பல இடங்களில் கற்பவரின் சிந்தனையைத் தூண்டும்முறையில் வினாக்கள் எழுப்பிச் செல்கிறார். “மனைவி தக்கவள் ஆனால், ஒருவனுடைய வாழ்வில் இல்லாதது என்ன? மனைவி தக்கவளாக வாய்க்காவிட்டால், அவனுடைய வாழ்வில் இருப்பது என்ன?”           

இல்லதுஎன் இல்லவள் மாண்பானால்? உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை?

வேறு சில இடங்களில், நாடக மேடையையும் மாந்தரையும் படைத்துவிட்டு, அந்த மாந்தரின் பேச்சால் உண்மைகள் விளங்கச் செய்கிறார்; நாடகப்போக்கில் அமைந்த கருத்துகள் முதல் பகுதியில் மிகக் குறைவு; இரண்டாம் பகுதியில் ஒரு சில அதிகாரங்களில் உள்ளன; மூன்றாம் பகுதியாகிய ‘காமத்துப் பால்’ முழுதுமே நாடகப்போக்கில்அமைந்துள்ளது.

காதல் கற்பனை

தகாலன் தன் காதலியை அழகான இயற்கைச் சூழலில் காண்கிறான். கண்டு காதல் கொண்டு உள்ளம் மயங்குகிறான். அந்த மயக்கம் அவனுடைய