ஆற்றில்
இடுமாறு கட்டளை இட்டான். அவ்வாறு ஆற்றில் இடப்பட்ட ஏடுகளுள் நானூறுமட்டும் நீரை எதிர்த்துச்
சென்றனவாம். அவற்றைமட்டும் தொகுத்து ‘நாலடியார்’ என்று பெயரிட்டு
அமைத்தானாம்.
துறவறம்பற்றியும், நிலையாமைபற்றியும் வற்புறுத்தும் பாடல்கள் பல இருப்பதால் இவை
சமண முனிவர் இயற்றியவை என்ற உண்மையும், புலவர் தனித்தனியே பாடிய நீதிவெண்பாக்கள்
‘நாலடியார்’ என அமைக்கப்பட்டது என்ற உண்மையும், காலவெள்ளத்தைக்
கடந்து வாழ முடியாமல் மறைந்தவை போக அழியாமல் நின்ற மற்ற வெண்பாக்கள்மட்டுமே
இந்தத் தொகுப்பில் நின்றன என்ற உண்மையும் இந்தக் கதையால் விளங்குவன ஆகும்.
பிற்காலத்தில் பதுமனார் என்ற புலவர் ஒருவர் திருக்குறளைப் பின்பற்றி இந்நூலைப்
பாகுபாடு செய்தார். அதனால் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று
பகுதிகளும் அவற்றின் உட்பிரிவுகளும் உள்ளன. திருக்குறள் போலவே இந்த நூலும் ஆங்கிலநாட்டு
மிஷனரியைச் சார்ந்த டாக்டர் ஜி. யு. போப் என்பவரின் உள்ளத்தைக் கவர்ந்தது.
அவர் முழு நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
நிலையாமை
முதலியவற்றை வற்புறுத்தும் பாட்டுகளும் சொல்லோவியங்களாய் இலக்கியச் சுவையோடு அமைந்துள்ள
தன்மை இந்நூலின் சிறப்பியல்பாகும். “ஆறு சுவையுடன் கூடிய உணவுகளை விரும்பி மனைவி
ஊட்ட, அவற்றுள் இது வேண்டும் இது வேண்டா என்று உண்ட செல்வரும் ஒரு காலத்தில் ஏழைகளாய்
ஓரிடத்திற்குச் சென்று கூழ் இரந்து உண்ண நேரும். ஆகையால் செல்வம் ஒரு நிலையான பொருளாகக்
கருதத்தக்கது ஆகாது.” “யானையின் புறமுதுகில் அழகுபெறக் குடையின் நிழலில்
அமர்ந்து சேனைத் தலைவராய்ச் சென்ற பெருமை உடையவர்களும், தீவினை வந்து வாட்ட அதனால்
நிலைமை வேறுபட்டு, தம் சொந்த மனைவியையும் பகைவர் கைப்பற்றிக்கொள்ள நேர்ந்து
வீழ்ச்சி உறுவார்கள்.” “குளிர்ந்த சோலையில் பயன் நிறைந்த மரங்கள்
பழுத்த பழங்கள் உதிர்ந்து வீழ்ந்தபின் பொலிவற்றுப்போவது போன்றது இளமை. வேல்
போன்ற கூர்மையான கண் உடையவள் என்று இவளை மிகப் பெரிதும் விரும்பாதீர்கள். இளமையின்
அழகு நிறைந்த இவளும், முதுமை உற்றுக் கூன் உடையவளாய், கையிலே கோல் ஏந்தி, பார்வையும்
குன்றி, அந்தக் கோலே கண்ணாகக் கொண்டு தடுமாறி நடப்பவள் ஆவாள்.” இவ்வாறு
மனக்கண்முன் காட்சி தோன்றுமாறு இந்தக் கருத்துகளை அறிவுறுத்தும் நூல், கடமையையும்
வற்புறுத்திச் செல்கிறது. “கரும்பை ஆலையிலே வைத்து ஆட்டிப் பாகிலிருந்து வெல்லக்
கட்டிகளை எடுத்துக்கொண்டவர்கள், அந்தக்
|