| 
 
8. 
 காப்பியங்கள்(கி. 
 பி. 500 - 1200)
 பாரத 
 நூல்கள் பக்தி இலக்கியம் 
 எழுந்த காலத்தில், திருமாலின் அவதாரங்களைப்பற்றிய பாரதம், இராமாயணம் ஆகிய இதிகாச 
 நூல்கள் தமிழ்நாட்டில் செல்வாக்கான இடம் பெற்றன. சங்க இலக்கித்தில் ஒரு சில 
 பாட்டுகளில் இதிகாசங்களில் உள்ள இராமபிரான் செயல்களும் கண்ணன் செயல்களும் உவமையாகவோ 
 வேறு வகையாகவோ குறிப்பிடப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் மக்கள் பாடும் பாடல்களாக 
 வரும் பகுதிகளில் இதிகாசக் கதைகளின் குறிப்புகள் பல உள்ளன.  ஆனால் இராமாயணமும் 
 பாரதமும் தமிழில் இயற்றப்பட்ட காலம் அடுத்து வந்த காலத்திலேயே (கி.பி. நான்கு 
 ஐந்தாம் நூற்றாண்டுகளிலே) ஆகும். பாரதம் பாடிய 
 பெருந்தேவனார் என்ற புலவர் ஒருவர் சங்க நூல்கள் சிலவற்றிற்கு ஒவ்வொரு கடவுள் வாழ்த்தாகப் 
 பாடிச் சேர்த்துள்ளார்.  அந்தப் பாடல்கள் அந்தந்தத் தொகைநூல்களின் பாட்டுகளின் 
 வடிவத்தை ஒட்டியே அமைந்துள்ளன.  அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, புறநானூறு 
 என்னும் ஐந்து நூல்களுக்கும் அவருடைய கடவுள் வாழ்த்துப் பாட்டுகள் சேர்ந்துள்ளன. அவர் 
 பாடிய பாரதம் இப்போது கிடைக்கவில்லை.  தொல்காப்பியம், யாப்பருங்கலம் என்னும் 
 நூல்களின் உரையில் அந்த உரையாசிரியர்களால் அவருடைய பாரதநூலின் பாட்டுகள் சில 
 மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. அவை அகவல் என்னும் செய்யுளால் இயற்றப்பட்டுச் 
 சங்க இலக்கியப் போக்கிலேயே உள்ளன. அந்தப் பாரத நூல் இடையிடையே உரைநடையும் 
 அமைந்தது என அறியப்படுகிறது. பெருந்தேவனார் 
 பாடிய அந்தப் பாரதம் தவிர, பாரத வெண்பா என்று வெண்பாவால் இயற்றப்பட்ட வேறொரு 
 பாரதமும் இருந்தது. அதுவும் இடையிடையே உரைநடை கலந்து அமைந்தது என்பர். கி.பி. ஒன்பதாம் 
 நூற்றாண்டில் நந்திவர்மன் என்ற பல்லவ அரசன் காலத்தில் இயற்றப்பட்டது அது.  அதன் 
 சிறுபகுதியே இப்போது கிடைத்துள்ளது. அதன் செய்யுள்கள் செந்தமிழ் நடையிலும் உரைநடை 
 மணிப்பிரவாளம் என்னும் கலப்பு நடையிலும் உள்ளன.  கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் அருணிலைவிசாகர் 
 அல்லது வத்சராசர் என்பவர் பாரதத்தைத் தமிழில் இயற்றினார்.  அவருடைய |