நூல்களும் சிறப்புக்கு
உரியவை. அவற்றுள் திருப்போரூர் சந்நிதிமுறை என்னும் தொகுப்பு, உருக்கமான பக்திப்பாடல்கள்
அடங்கியது.
சிதம்பர
சுவாமிகள்
பிற்காலத்தில்
துறவறத்தாராய் விளங்கிப் பக்தி இலக்கியம் படைத்தவர்களுள் அந்தச் சிதம்பர சுவாமிகள்
குறிப்பிடத்தக்கவர். மீனாட்சியம்மைமீது நீண்ட ஒரு பாடலும், நெஞ்சுவிடு தூது என்ற
நூலும் வேறு சில பாடல்களும் இயற்றியவர். திருப்போரூர் என்னும் தலத்தில் உள்ள முருகன்மேல்
பிள்ளைத்தமிழும், தாலாட்டும், திருப்பள்ளியெழுச்சியும், குயில்பாட்டும், கிளிப்பாட்டும்,
தூதும், ஊசலும் பாடியுள்ளார். குயில்பத்தும், அடைக்கலப்பத்தும் திருவாசகத்தைப் பின்பற்றிப்
பாடியவை; திருவாசகம் போலவே பாடல்கள் உருக்கமாக உள்ளன. திருப்பள்ளியெழுச்சிப்
பாடலும் திருவாசகத்தில் உள்ளவாறே அமைந்தது. பாடல்களின் நடை தடையற்ற ஓட்டம் உடையது;
பக்திச் சுவைக்கு ஏற்ற நெகிழ்ச்சி வாய்ந்தது.
தத்துவராயர்
இலக்கிய வடிவங்களையும்
நாட்டுப்பாடல் வடிவங்களையும் பயன்படுத்தித் தத்துவக் கருத்துகள் அமைந்த பல பாடல்களைப்
பாடியவர் தத்துவராயர் என்பவர். அவர்போல் வேறு யாரும் அத்தனை வடிவங்களைப் பயன்படுத்தியவர்கள்
இல்லை எனலாம். உலா, தூது, கலம்பகம், பரணி, அந்தாதி முதலான பலவும் பாடியுள்ளார்.
அஞ்ஞவதைப் பரணியும் மோகவதைப் பரணியும் அவர் பாடிய பரணி நூல்கள். அவற்றில் அரசர்களின்
போர்க்களங்கள் இல்லை. ஞானிகளின் போர்கள் உள்ளன. அஞ்ஞானமும் மோகமும் ஞானத்தால்
வெல்லப்பட்டனவாக ஆன்மிகப்போர்கள் பாடப்பட்டுள்ளன. சில பாடல்கள் திருவாசகத்தைப்
பின்பற்றிப் பாடியிருக்கிறார். பக்தியுணர்ச்சிக்கு முதன்மை இல்லாமல், தத்துவக்
கருத்துகளை விளக்கிப் பாடியதால், திருவாசகம் போல் பாடல்கள் இலக்கியச் சிறப்புப்
பெற முடியவில்லை. திருவாசகத்தில் உள்ளது போல், இவரும், ‘குயிலே! இறைவனை
நீ வரக் கூவாய்’ என்று குயிலை விளித்துப் பாடியுள்ளார். திருவாசகத்தில் உள்ள
அன்னைப்பத்துப் போலவே இவரும், ‘அன்னே என்னும்’ என்று முடியும் பாடல்கள்
இயற்றியுள்ளார். திருச்சாழல் பாடியுள்ளார்; ‘அச்சோ’ என்று முடியும்
பாடல்கள் இயற்றியுள்ளார். அம்மானை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஊசல்
முதலிய பாடல்களும் திருவாசகத்தைப் பின்பற்றி இயற்றப்பட்டுள்ளன. தேவாரத்தில் உள்ளவைபோல,
காதல்துறைகள் அமைந்த பக்திப்பாடல்களும் பாடியிருக்கிறார். இவை தவிர, புதிய வடிவங்கள்
பலவற்றை நாட்டுப்
|