கோபாலகிருஷ்ண
பாரதி
இசைக் கலைக்கு உரிய பாட்டு வடிவங்கள் சில, பழங்காலத்திலேயே
மெல்ல மெல்ல இலக்கிய நூல்களுக்கும் உரியவைகளாகப் புகுந்தன. ஆழ்வார் நாயன்மார்களின்
பாடல்களில் அந்தப் புதுமையைத் தெளிவாகக் காணலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில்
கீர்த்தனை, சிந்து முதலிய இசைப்பாடல்கள் இலக்கியங்கள் சிலவற்றில் பெரும்பங்கு
பெற்றன. திரிகூடராசப்பக் கவிராயர் முதலானோர் அவ்வகை நூல்களைப் படைத்தார்கள்.
அவை மற்ற இலக்கிய நூல்களைப் போலவே தரம் உடையனவாகப் போற்றப்பட்டன. முழுதும்
கீர்த்தனையாலேயே ஆகிய இலக்கியங்கள் முதல்முதலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில்
இயற்றப்பட்டன.
பெரியபுராணத்து அடியார் சிலர்தம் வாழ்க்கையைப் போற்றிக்
கீர்த்தனைகளாகிய இசைப்பாடல்கள் பாடினார் கோபாலகிருஷ்ண பாரதி. திருநீலகண்ட நாயனார்
கீர்த்தனை, இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
என்பவை அவர் பாடியவை. அவருடைய கீர்த்தனைகள் பலர்க்கு வழிகாட்டியாய் அமைந்தன.
சிறப்பாக, நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் நாடு முழுவதும் பரவி, மக்களின் உள்ளத்தைக்
கவர்ந்தன. நந்தனார் என்பவர் உழவுத்தொழிலினர்; ஹரிஜனக் குடும்பத்தில் பிறந்தவர்;
சிதம்பரத்துக்குப் போய் நடராசரின் தரிசனம் பெறவேண்டும் என்று மிக ஆசைப்பட்டார்.
அவருடைய முதலாளி பல காரணம் சொல்லித் தடுத்துவந்தார். வேலையாளாகிய நந்தனாரின்
உள்ளமோ நடராசனைக் காண மேன்மேலும் ஆர்வம் கொண்டது. கடைசியாகச் சிதம்பரம் சென்றார்.
சிவபெருமான் அருளால் தடைகளைக் கடந்தார்; முத்தி பெற்றார். சேக்கிழார் பன்னிரண்டாம்
நூற்றாண்டில் இதை உருக்கமாகத் தம்பெரிய புராணத்துள் எழுதினார். இந்தக் கதையை மேலும்
உருக்கமான முறையில் கோபாலகிருஷ்ண பாரதி பாடியுள்ளார். அந்தப் பாடல்கள் நாடு முழுவதும்
நன்றாகப் பரவிவிட்டமையால், பிற்காலப் பாடல்கள் பலவற்றிற்கு அவற்றின் மெட்டையே
அமைத்தார்கள். சுப்பிரமணிய பாரதியாரும் சில பாடல்களுக்கு இசையமைப்பு இன்னது என்று
குறிக்கும்போது, நந்தனார் கீர்த்தனையில் உள்ள இன்ன பாட்டின் மெட்டு என்று குறிப்பிடுகிறார்.
அந்த அளவிற்கு அவருடைய பாடல்கள் தமிழர்களிடையே சிறப்பிடம் பெற்றுவிட்டன. ஆனால்,
தொடக்கத்தில் அவருடைய பாடல்களில் உள்ள கதைவேறுபாட்டையும் இலக்கணப் பிழைகளையும்
கண்ட புலவர்கள், அவற்றை வெறுத்தார்கள். அவர்காலத்தில் பெரும்புலவராக விளங்கிய
மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் முதலில் சிறப்புப்பாயிரம் (மதிப்புப் பாடல்) தரத்
|