பெரும்புலவராகிய சரவணப் பெருமாளையர் நான்மணிமாலையாக நாற்பது
பாடலும் பாடினார்கள். அவருடைய பாடல்களில் பேச்சுத்தமிழின் நடையைப் பல இடங்களில்
காணலாம்.
மற்றப்
புலவர்கள்
செய்க் அப்துல் காதர் நயினார் லப்பை (- 1848) என்பவர்
பல மொழிகள் கற்ற புலவர். இரண்டு புராணங்களும் மக்கா நகர்பற்றிய கலம்பகமும் அந்தாதி
முதலியனவும் இயற்றினார்.
திருப்புகழ், கலம்பகம், பிள்ளைத்தமிழ், அந்தாதி முதலிய
பலவகைச் செய்யுள் நூல்களைச் சமயக் கருத்துகள் அமைத்துப் பாடியவர் பிச்சை இபுராகிம்
புலவர் (1863 - 1908). ஏறக்குறையப் பதினான்கு செய்யுள் நூல்கள் அவர் இயற்றியவை.
பொருள்நயம் மிகுந்த தனிப்பாடல் பல பாடியவர் சவ்வாதுப்புலவர்.
சிந்துக் களஞ்சியம் எனப் புகழ் பெற்றவர் முகம்மது கான் என்ற இஸ்லாமியப் புலவர்.
நபிகள் நாயகத்தின் மேல் கீர்த்தனைகள் பல பாடியவர் அப்துல் மஜீது என்னும் புலவர்.
வண்ணம் என்னும் சந்தச் செய்யுள் பாடுவதில் வல்லவராகப்
பெயர் பெற்ற முஸ்லிம் புலவர் வண்ணக் களஞ்சியப் புலவர் என்பவர். அவர் மோகிதீன்
புராணம் இயற்றினார். அதில் நாகூர் தர்க்காவின் சாதுவைப் போற்றி அவருடைய வரலாற்றை
விளக்கினார். அந்த நூலுக்காகப் புலவர்க்கு ஒரு செல்வர் தம் மகளையே பரிசாகத் தந்து
திருமணம் செய்வித்தார்.
பெண்புத்திமாலை என்ற பெயரால் பெண்களுக்கு உரிய அறிவுரைகளை
இரண்டு அடிகளில் குறள் வெண்பாக்களாக இயற்றித் தந்தவர் முகம்மது உசேன் என்ற புலவர்.
‘கவிப் பூஞ்சோலை’, ‘இலக்கியப் பூங்கா’, ‘தமிழ் நாட்டு
இஸ்லாமியப் புலவர்கள்’ என்னும் நூல்களை இயற்றியவர் இக்காலத்துப் புலவர் பனைக்குளம்
அப்துல் மஜீது. அவர் நூல்கள் பலவற்றிலும் இலக்கியத் தரம் உண்டு; உண்மை விளக்கும்
ஆர்வம் உண்டு; வளமான தமிழ்நடை உண்டு. ‘நாயக வெண்பா’ என்னும் செய்யுள் நூலிலும்
அந்தச் சிறப்பைக் காணலாம். புகழேந்தியின் வெண்பாக்கள்போல் செம்மையாகப் பாட்டுகள்
அமைந்துள்ளன. நபிநாயகத்தின் வரலாற்றில் உள்ள நிகழ்ச்சிகளைச் சிறந்த பாடல்களுடனும்
நயமான உவமைகளுடனும் விளக்கும் நூல் அது. தமிழ்க் காப்பிய மரபின்படியே நாட்டுப் படலம்
முதலியவற்றை வருணனைச் சிறப்புடன் அமைத்துள்ளார்.
‘நெஞ்சில் நிறைந்த நபிமணி’ என்பது இந்த நூற்றாண்டின்
பெரிய நூல் எனலாம். 3663 கண்ணிகளால் (இரண்டு அடிகள் உடைய இனிய செய்யுள்வகையால்)
பிறமொழிச் சொற்கள் குறைந்த தமிழில் நபிநாயகத்தின் வரலாற்றையும் அறிவுரைகளையும்
எடுத்துரைப்பது அது. பாடல்களின் நடை,
|