| நாடி அலைகிறான்; கடைசியில் ஒரு நாள் தன் பெண்கள் மூவரையே 
 கண்டு அவர்களின் அழகில் மயங்குகிறான்; அவன் தாரை தாரையாகக் கண்ணீர் விட்டுக் 
 கற்சிலை போல் அமர்ந்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ரப்பர்த் தோட்டத்தில் ஒற்றுமையாய் 
 வாழத் தெரியாத தமிழர் படும் இடர் ஒரு கதையில் சொல்லோவியம் ஆக்கப்படுகிறது. ‘செம்மண்ணும் நீல மலர்களும்’, ‘நான் ஓர் இந்துப் பெண்’, 
 ‘நெஞ்சே! நீ வாழ்க’ என்ற குறுநாவல்கள் புதுமையாகப் படைக்கப்பட்டுள்ளன. ‘இளந்தளிர்’, ‘கவிதைப் பித்தன் கவிதைகள்’ என்பவை 
 முரசு நெடுமாறனும் வேலுசாமியும் எழுதிய மலேசியக் கவிதைகளின் தொகுப்புகள். முருகு சுப்பிரமணியம் திங்களிதழ் நாளிதழ்கள் நடத்திப் 
 புகழ்பெற்றவர். அவர் பல அழகிய கட்டுரைகள் எழுதித் தொகுப்புகளாகவும் வெளியிட்டுள்ளார். இவ்வாறு மலேசியாவின் தமிழிலக்கியம் மெல்ல மெல்ல, 
 தெளிவாக, வளரத் தொடங்கிவிட்டது. |