பக்கம் எண்: - 335 -

மற்றவர்களுக்கும் இடையே உணர்த்தும் பொருளில் வேறுபாடு இருந்து வருகிறது. அதனால் போலி எழுத்துகளும் வெறி எழுத்துகளும் மிகுவதற்கு இடம் ஆகிறது. ஆயினும் இத்தனைக்கும் இடையே உண்மை விளங்க முடியும் என்ற நம்பிக்கையால், எழுத்தாளர் சிலர் நடுநிலைமையோடு எழுதி வரும் நூல்களும் உள்ளன. திறனாய்வுத் துறையிலும் மற்றத் துறைகளிலும் அத்தகைய நடுநிலையான நூல்களும் தோன்றிவருதல் மகிழ்ச்சி தருகிறது.