உள்ளம் தெளியும்ஒரு பாட்டிலேஅடா - மிக்க
ஊக்கம் பிறக்கும்ஒரு பாட்டிலேஅடா
கள்ளின் வெறிகொள்ளும்ஓர் பாட்டிலேஅடா - ஊற்றாய்க்
கண்ணீர் சொரிந்திடும்ஓர் பாட்டிலேஅடா
வேடிக்கையான
முறையில் கற்பனை செய்திருந்தாலும், இந்தப் பாடல் பாரதியின் கவிதைகளுக்கு நல்ல
திறனாய்வு என்று சொல்லுமாறு உள்ளது. பாரதியின் எல்லாவகையான பாட்டுகளின் சிறப்பையும்
இதில் தெளிவாகச் சுட்டிக் கூறிவிட்டார் எனலாம்.
அவருடைய நையாண்டிக்கும் முற்போக்குக்கும் நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது தம் மாவட்டத்து
மக்களின் வழக்கத்தை எடுத்துரைக்கும் நூல் ஆகும் (நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்
என்பது). இசைக் கச்சேரியில் பாடக்கூடிய நல்ல கீர்த்தனைகளையும் அவர் இயற்றியுள்ளார்.
வரலாற்றிலும் கல்வெட்டிலும் ஆராய்ச்சி செய்யும் விருப்பம் மிகுந்தவர் அவர். அந்த
வழியில் சில கட்டுரைகளும் உரைநடை நூலும் எழுதியுள்ளார்.
நாமக்கல்
கவிஞர்
பழங்காலத்தில் அரசரையும் வள்ளல்களையும் போற்றிப் பாடும் வழக்கம் இருந்தது. இடைக்காலத்தில்
அவர்களையும் பாடினார்கள்; தெய்வங்களையும் பாடினார்கள். நாட்டையும் மொழியையும்
வாழ்த்தி வணங்கிப் பாடும் பாடல்கள் இல்லை. மேற்குநாட்டாரின் தொடர்பால் நாட்டுவாழ்த்துப்
பாடல்களும், மொழிவாழ்த்துப் பாடல்களும் வளர்ந்தன. சுந்தரம் பிள்ளை தாம் இயற்றிய
‘மனோன்மணீயம்’ என்னும் செய்யுள் நாடகத்தின் தொடக்கத்தில் தமிழை
ஒரு தெய்வமாகப் போற்றி மொழிவாழ்த்துப் பாடல் பாடினார். இன்றுவரையில் அந்தத்
தமிழ்மொழி வாழ்த்துப்பாடல் பலராலும் பாடப்பட்டு வருகிறது. அதன் பிறகு தேசீயக்
கவிஞர் பாரதியார், பாரத தேசத்தையும் தமிழ்நாட்டையும் தமிழ்மொழியையும் வாழ்த்திப்
பாடல்கள் இயற்றினார். நாட்டுணர்ச்சியும் மொழியுணர்ச்சியும் வளர்வதற்கு அவை பெரிதும்
காரணமாக இருந்தன; இன்றும் அவ்வாறு இருந்துவருகின்றன. பாரதிதாசன் தமிழைப் போற்றியும்
தமிழ்நாட்டைப் போற்றியும் உணர்ச்சியுடன் பாடினார். ‘தமிழ் இயக்கம்’
என்று தனித் தொகுதியாக மொழியுணர்ச்சிப் பாடல்கள் உள்ளன. ‘தமிழன் இதயம்’
என்று நாமக்கல் கவிஞர் தமிழரிடையே இன உணர்ச்சியை ஊட்டவல்ல பாடல்களும் பாடினார்.
‘அவனும் அவளும்’ என்பது நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின்
காப்பியம். அதில் உள்ள எல்லாச் செய்யுள்களும் எளிய நடையில் அமைந்தவை. ‘சங்கொலி’,
‘தமிழ்த்தேர்’ என்னும் தொகுப்புகளும் நல்ல
|